பக்கங்கள்

بسم الله الرحمن الرحيم الحمدلله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته بارك الله بكم و سدد خطاكم

அன்பு நண்பர்களுக்கு.... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. எனக்கு மிக்க மகிழ்ட்சி நீங்கள் என் இணையதளத்திர்க்கு வந்ததற்கு - அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்

மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்
மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்

புதன், 22 பிப்ரவரி, 2023

பேச்சின் ஒழுங்குகள் பற்றி இஸ்லாம்.

 

📚 أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 📚

🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

♣ பிப்ரவரி –2022 –24 –ந் தேதி ஹிஜ்ரி–1444 – [شعبان]   ஷஃபான் மாதம் – 03 –ம் தேதி  முதல் வார ஜுமுஆ பேருரையின் குறிப்புரை வெளியீட்டு எண்: 213 [டிஜிடல் முறை - 56]  ♣

Download PDF

bayan

بسم الله، والحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز {يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏ ۝ } -[ سورة الأحزاب [33]-- الآية 70] - صدق الله العظيم / قال رسول الله ﷺ «، أوصاني خليلي صلَّى اللهُ عليه وسلَّم بخصالٍ مِن الخيرِ: ( أوصاني بألَّا أنظُرَ إلى مَن هو فوقي وأنْ أنظُرَ إلى مَن هو دوني وأوصاني بحبِّ المساكينِ والدُّنوِّ منهم وأوصاني أنْ أصِلَ رحِمي وإنْ أدبَرتْ وأوصاني ألَّا أخافَ في اللهِ لومةَ لائمٍ وأوصاني أنْ أقولَ الحقَّ وإنْ كان مُرًّا وأوصاني أنْ أُكثِرَ مِن قولِ: لا حولَ ولا قوَّةَ إلَّا باللهِ فإنَّها كنزٌ مِن كنوزُ الجنَّةِ ، »‏‏ ( رواه صححه ابن حبان )... [إلخ], الى آخره, أو كما عبر الرسول صلى الله عليه وسلم

✍🏻  [ஆசிரியரின் குறிப்பு அன்புள்ள உஸ்தாதுகளே!!  கீழ்கண்ட குறிப்புகள் தங்களுக்கு ஞாபகமூட்டும் முகமாக‌  சுருக்கி போடப்பட்டுள்ளன. பயானில் நல்லா விபரமாக பேசுங்கள். உஸ்தாத். மிக விளக்கமாக குறிப்புகளை பதிவிட்டால்  பக்கம் நீண்டுவிடும் என்பதற்க்காக சுருக்கி தர‌ப்படுகிறது. உங்களுக்கு இது தொடர்பாக வேறு பாய்ண்டுகள் தெரிந்தாலும் அதனைப்பற்றி விரிவாக‌ பேசுங்கள் உஸ்தாத்.

♣ முன்னுரை: المقد مة INTRODUCTION & துவக்கவுரை:-

✍🏻 அன்புள்ளவர்களே நாமெல்லாம் ல்லாஹ்வின்   பேரருளால்  [شعبانஃபான் மாத‌த்தின்  முதல் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். ல்ஹம்துலில்லாஹ் ..

✍🏻 அன்புள்ளவர்களே! நாமெல்லாம் ரமலானுக்கு தயாராகி கொண்டிருக்கிறோம். இன்னும் புனித ரமலான் மாதத்தை அடைய 28 நாட்களே உள்ளன.

இந்த‌ புனித ரமலானில் நமக்கு அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும் முக்கிய அமல் செய்யும் உறுப்பான நமது நாவில் [பேச்சில்]  சில இலகுவான  சின்ன சின்ன அமல்கள் இருக்கின்றன அவைகளை செய்தால் நமது பட்டோலைகளை ஈசியாக‌ கணக்கச் செய்து விடலாம். [உதாரணமாக: பரிட்சையில் வரும் 1 மார்க் கொஸ்டின் போல ] அவைகளை நாம் தெரிந்து கொண்டு வரக்கூடிய ரமலானில் போட்டி போட்டு அமல் செய்வோமாக!

அதனடிப்படையில் நமது பேச்சின் முலம் நன்மையையும் சம்பாதிக்கலாம். தீமைகளையும் சம்பாதிக்கலாம். [சொர்கத்திற்க்கும் போகலாம், நரகத்திற்க்கும் போகலாம்]. உதாரணமாக கீழுள்ள நபி மொழி போல.

عَنْ اَمَةِ ابْنَةِ اَبِي الْحَكَمِ الْغِفَارِيَّةِؓ قَالَتْ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّ الرَّجُلَ لَيَدْنُوْ مِنَ الْجَنَّةِ حَتَّي مَا يَكُوْنُ بَيْنَهُ وَبَيْنَهَا قِيْدُ ذِرَاعٍ فَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ فَيَتَبَاعَدُ مِنْهَا اَبْعَدَ مِنْ صَنْعَاءَ. رواه احمد

மனிதன் தனக்கும் சொர்க்கத்திற்கும் இடையில் ஒரு முழம் அளவு நெருங்கிவிடுகின்றான். பிறகு அவன் கூறும் சில வார்த்தைகளின் காரணமாக மதீனாவிலிருந்து ஸன்ஆஃவை (யமன் நாட்டின் நகரம்) விட அதிகமான தொலைதூரம் சொர்க்கத்தை விட்டும் தூரமாகிவிடுகிறான்'' (முஸ்னத் அஹ்மத்)

عَنْ عَبْدِ اللهِؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اَكْثَرُ خَطَايَا ابْنِ آدَمَ فِيْ لِسَانِهِ. (وهو طرف من الحديث) رواه الطبراني

மனிதனின் தவறுகளில் மிகுதமானவை அவனுடைய நாவால் ஏற்படுகின்றன'' (தபரானீ, )

ஆக  ✍🏻 அன்புள்ளவர்களே!  ஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும், கொடியவனாகவும், மென்மையானவனாகவும், கடுமை காட்டுபவனாகவும் பிரதிப­லிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.

சில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் ஜோக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார்.

நாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் 'நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்' என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.

விளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு பண்ணுகின்றன. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும் துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன.

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இஸ்லாம்  அழகிய பேச்சுகளை மட்டுமே பேசும் படி இஸ்லாம் வ­யுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது. ஆக பேச்சின் ஒழுங்குகள் பற்றி இஸ்லாம்.  என்ன கூறுகிறது என்பதனைப்பற்றி இன்றைய ஜுமுஆவின் உரையின் மூலம் முழுமையாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்……

  • பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும் , கேட்ட‌தின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வ‌ல்ல நாயகன் ﷻ நம்மனைவருக்கும் தந்த‌ருள்புரிவானாக! ஆமீன் ✍என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈

♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى Allah says in the Qur’an: 

【ஆசிரியரின் குறிப்பு】 அன்புள்ள உஸ்தாதுகளே!! தாங்கள் ஜுமுஆ பேருரையாற்றும் போது; கீழுள்ள‌ குர்ஆன் வசனங்களை ஓதும் போது கிராஅத்தாக ஓதுங்கள்.

【நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். [அல்குர்ஆன் 33:70.]  

♣ நபி  அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم The Prophet  said: ♣

【எப்போதும் உண்மையே பேசுக‌…】

✍🏻 அன்புள்ளவர்களே!   நம் மார்க்கம் எப்போதும் உண்மையே  பேசும் படி இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது. 

 أمَرَني خَليلي صلَّى اللهُ عليه وسلَّمَ بسَبعٍ: أمَرَني بحُبِّ المَساكينِ، والدُّنُوِّ منهم، وأمَرَني أنْ أنظُرَ إلى مَن هو دوني، ولا أنظُرَ إلى مَن هو فَوْقي، وأمَرَني أنْ أصِلَ الرحِمَ وإنْ أدبَرَتْ، وأمَرَني ألَّا أسأَلَ أحَدًا شيئًا، وأمَرَني أنْ أقولَ بالحقِّ، وإنْ كان مُرًّا، وأمَرَني ألَّا أخافَ في اللهِ لَومةَ لائمٍ، وأمَرَني أنْ أُكثِرَ من قولِ: لا حَولَ ولا قُوَّةَ إلَّا باللهِ؛ فإنَّهُنَّ من كَنزٍ تحتَ العَرشِ. ، وصححه ابن حبان 

அபூதர் (ரலி) சொல்கிறார்கள் என்னுடைய உற்ற நண்பர் -நபி (ஸல்) அவர்கள் எனக்கு  ஏழு விஷயங்களை செய்து வரும்படி கட்டளையிட்டார்கள் அதில் ஒன்று தான் "எப்போதும் உண்மையே பேசு; அது மற்றவர்களுக்கு கசப்பாக இருந்தாலும் சரியே".  ; [அஹ்மது 21415.]

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَفْضَلُ الْجِهَادِ كَلِمَةُ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ ‏"‏ ‏.‏ أَوْ ‏"‏ أَمِيرٍ جَائِرٍ"‏ ‏(‏‏(‏رواه أبو داود، والترمذي وقال‏:‏ حديث حسن‏)‏‏)‏‏.‏

போரில் சிறந்தது அநீதக்கார அரசனிடம் நீத்ததை எடுத்துக் கூறுவதுதான். [அபுதாவூத் 4344.]

عَرَضَ لرسولِ اللَّهِ - صلَّى اللَّهُ عليهِ وعلى آلِهِ وسلَّمَ - رجلٌ عندَ الجَمرةِ الأولى فقالَ : يا رسولَ اللَّهِ أيُّ الجِهادِ أفضَلُ ؟ فسَكتَ عنهُ فلمَّا رأى الجمرةَ الثَّانيةَ ، سألَه فسَكتَ عنهُ ، فلمَّا رمى جَمرةَ العقَبةِ وضعَ رِجلَه في الغرزِ ليركبَ قالَ : أينَ السَّائلُ ؟ قالَ : أنا يا رسولَ اللَّهِ قالَ : كَلِمةُ حقٍّ عندَ سلطانٍ جائرٍ (‏‏(‏رواه النسائي بإسناد صحيح‏)‏‏)‏‏.‏

நபி ஸல் அவர்கள் ஓட்டகையின் மீது ஏற சேனத்தில் தன் காலை வைத்த போது ஒரு மனிதர் "போரில் சிறந்தது எது? எனக் கேட்டார். அதற்க்கு அநீதக்கார அரசனுக்கு முன் நீத்ததை [சத்தியத்தை] எடுத்துரைப்பதாகும்.. [நஸாயி]

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يُكْتَبَ صِدِّيقًا وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ كَذَّابًا رواه مسلم

உண்மையே பேசுங்கள். உண்மை நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார்; அதை தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் “வாய்மையாளர்’ (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். பொய் பேசாதீர்கள். பொய் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரக நெருப்புக்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டே இருப்பார்; அதைத் தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் “பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.  முஸ்லிம் (5083)

【 நல்ல வார்த்தைகளை நவில வேண்டும் 】
┈•••❈• ❀ ••❈•••┈

✍🏻 அன்புள்ளவர்களே நல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும். மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவியதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும். தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்.

இது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசும் படி ஆர்வமூட்டுகிறது. நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனிடம் செல்கின்றன.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அல்குர்ஆன் (33:70)

ஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.

قَالَ ابْنُ أَبِي شَيْبَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ ‏"‏ ‏. எல்லா நல்லறமும் தர்மமே. [முஸ்லிம் 1831]

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ كُلُّ سُلاَمَى مِنَ النَّاسِ عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ تَطْلُعُ فِيهِ الشَّمْسُ - قَالَ - تَعْدِلُ بَيْنَ الاِثْنَيْنِ صَدَقَةٌ وَتُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ فَتَحْمِلُهُ عَلَيْهَا أَوْ تَرْفَعُ لَهُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ - قَالَ - وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ وَكُلُّ خَطْوَةٍ تَمْشِيهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ وَتُمِيطُ الأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ ‏"‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையி­ருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும். புகாரி (2989)

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ ‏"‏ ‏.‏ قِيلَ أَرَأَيْتَ إِنْ لَمْ يَجِدْ قَالَ ‏"‏ يَعْتَمِلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ ‏"‏ ‏.‏ قَالَ قِيلَ أَرَأَيْتَ إِنْ لَمْ يَسْتَطِعْ قَالَ ‏"‏ يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ ‏"‏ ‏.‏ قَالَ قِيلَ لَهُ أَرَأَيْتَ إِنْ لَمْ يَسْتَطِعْ قَالَ ‏"‏ يَأْمُرُ بِالْمَعْرُوفِ أَوِ الْخَيْرِ ‏"‏ ‏.‏ قَالَ أَرَأَيْتَ إِنْ لَمْ يَفْعَلْ قَالَ ‏"‏ يُمْسِكُ عَنِ الشَّرِّ فَإِنَّهَا صَدَقَةٌ ‏"‏ ‏.‏

நபி (ஸல்) அவர்கள் "தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்று கூறினார்கள். அப்போது "(தர்மம்செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்" என்று சொன்னார்கள். "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்" என்றார்கள். "(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் "அவர் "நல்லதை" அல்லது "நற்செயலை"(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்" என்றார்கள். "(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், "அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்" என்றார்கள். [முஸ்லிம்  1834.]

✍🏻 அன்புள்ளவர்களே!  நம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும் படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்.

عن علي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( إِنَّ فِي الْجَنَّةِ لَغُرَفًا يُرَى ظُهُورُهَا مِنْ بُطُونِهَا وَبُطُونُهَا مِنْ ظُهُورِهَا ‏"‏ ‏.‏ فَقَامَ إِلَيْهِ أَعْرَابِيٌّ فَقَالَ لِمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ هِيَ لِمَنْ أَطَابَ الْكَلاَمَ وَأَطْعَمَ الطَّعَامَ وَأَدَامَ الصِّيَامَ وَصَلَّى لِلَّهِ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ) رواه الترمذي بسند حسن

சுவனத்திலே விஷேட அறைகள் காணப்படுகின்றன. அவற்றின் வெளிப்பகுதியை உள்ளிருந்து பார்க்கலாம். உட்பகுதியை வெளியிருந்து பார்க்கலாம்” என நபியவர்கள் கூறியதற்கு ஒரு நாட்டுப் புற அரபி எழுந்து, “அது யாருக்குரியது...? யா ரஸூலல்லாஹ்!” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “யார் நல்ல முறையில் தமது வார்த்தைகளை  அமைத்துக் கொள்கறாரோ...! யார் உணவளிக்கிறாரோ...! யார் தொடர்ந்தேர்ச்சியாக நோன்பிருக்கிராரோ...! மேலும் மக்கள் உறங்கும் நேரத்தில் இரவில் எழுந்து நின்று வணங்குகிறாரோ...!  அவருக்குத் தான்” எனப் பதிலளித்தார்கள்.

قلتُ: يا رسولَ اللهِ، إنِّي إذا رأيتُك طابَتْ نَفسي وقرَّتْ عَيني، فأَنبِئْني عن كُلِّ شَيءٍ. فقال: كُلُّ شَيءٍ خُلِقَ مِن ماءٍ. قال: قلتُ: أَنبِئْني عن أَمرٍ إذا أخَذتُ به دخَلتُ الجنَّةَ. قال: أَفشِ السَّلامَ، وأَطعِمِ الطَّعامَ، وصِلِ الأَرحامَ، وقُم باللَّيلِ والنَّاسُ نِيامٌ، ثم ادخُلِ الجنَّةَ بِسَلامٍ

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்'' என்றேன். அதற்கு அவர்கள் ''அனைத்தும் நீரி­ருந்து படைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். ''எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்'' என்று கூறினேன். ''சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்'' என்று கூறினார்கள். [அஹ்மத் (9996)

✍🏻 அன்புள்ளவர்களே!  நல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத் தராது. கடும் வேதனையான நரக நெருப்பி­ருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ ذَكَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم النَّارَ، فَتَعَوَّذَ مِنْهَا وَأَشَاحَ بِوَجْهِهِ، ثُمَّ ذَكَرَ النَّارَ، فَتَعَوَّذَ مِنْهَا، وَأَشَاحَ بِوَجْهِهِ ـ قَالَ شُعْبَةُ أَمَّا مَرَّتَيْنِ فَلاَ أَشُكُّ ـ ثُمَّ قَالَ "" اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ تَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ ""

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்தி­ருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்). [ புகாரி (6023)

✍🏻 அன்புள்ளவர்களே!  ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையைச் செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன. மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ طِيَرَةَ، وَخَيْرُهَا الْفَأْلُ "". قَالَ وَمَا الْفَأْلُ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" الْكَلِمَةُ الصَّالِحَةُ يَسْمَعُهَا أَحَدُكُمْ "".

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று சொன்னார்கள். மக்கள், ''நற்குறி என்பதென்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள்.  புகாரி (5754)

தீய பேச்சுக்களைப் பொதுவாக எங்கும் பேசக்கூடாது. குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும். ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொது வீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்குக் காது கூசுகின்ற அளவிற்குப் பயங்கரமான வார்த்தைகள் வீசி எறியப்படுகின்றன.

சந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ أَبُو طَلْحَةَ كُنَّا قُعُودًا بِالأَفْنِيَةِ نَتَحَدَّثُ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَامَ عَلَيْنَا فَقَالَ ‏"‏ مَا لَكُمْ وَلِمَجَالِسِ الصُّعُدَاتِ اجْتَنِبُوا مَجَالِسَ الصُّعُدَاتِ ‏"‏ ‏.‏ فَقُلْنَا إِنَّمَا قَعَدْنَا لِغَيْرِ مَا بَاسٍ قَعَدْنَا نَتَذَاكَرُ وَنَتَحَدَّثُ ‏.‏ قَالَ ‏"‏ إِمَّا لاَ فَأَدُّوا حَقَّهَا غَضُّ الْبَصَرِ وَرَدُّ السَّلاَمِ وَحُسْنُ الْكَلاَمِ ‏"‏ ‏.

நாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ''பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள்? பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். ''தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்'' என்று கூறினோம். அதற்கு அவர்கள், ''அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)'' என்று கூறினார்கள்.  முஸ்­லிம் (4020)

【பிறரை சந்தோஷப்படுத்தும் பேச்சுக்கள் நல்லவையே! 】
┈•••❈• ❀ ••❈•••┈

✍🏻 அன்புள்ளவர்களே நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதால் மார்க்கம் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறு எதையும் பேசக் கூடாது என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. பிறரை சந்தோஷப்படுத்தி, நாமும் மகிழ்வதற்காக நகைச்சுவையுடன் பேசுவது குற்றமல்ல. நமது வார்த்தையால் பிறர் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிறரது மகிழ்சிக்கு நம்முடைய சொற்கள் காரணமாக இருப்பதால் அதுவும் நல்ல வார்த்தைகளின் பட்டியலுக்குள் வந்து விடும். நபி (ஸல்) அவர்களின் முன்பாக நபித்தோழர்கள் சிரித்து மகிழ்ந்து பேசியுள்ளார்கள். பெருமானாரை மகிழ்விப்பதற்காகவே ஒருவர் பிரத்யேகமாக இருந்துள்ளார்.

 عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ رَجُلاً، عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ اسْمُهُ عَبْدَ اللَّهِ، وَكَانَ يُلَقَّبُ حِمَارًا، وَكَانَ يُضْحِكُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார்.  புகாரி (6780)

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ كَثِيرًا كَانَ لاَ يَقُومُ مِنْ مُصَلاَّهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَإِذَا طَلَعَتْ قَامَ وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ صلى الله عليه وسلم ‏.

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி­) அவர்களிடம், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம்! அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்தி­ருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்'' என்று கூறினார்கள்.  முஸ்­லிம் (1188)

【 யாகாவாராயினும் நாகாக்க! 】
┈•••❈• ❀ ••❈•••┈

✍🏻 அன்புள்ளவர்களேநாவைப் பாதுகாப்பதை ஒரு முக்கியமான அம்சமாக இஸ்லாம் கருதுகிறது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு இரத்தினச் சுருக்கமாக மிக அவசியமான போதனையைக் கூறும்படி கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள் நாவைப் பாதுகாத்துக் கொள்வதையும் முக்கிய போதனையாக அவருக்குச் சொன்னார்கள்.

أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، وَقَدْ، قَالَ هُشَيْمٌ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مُرْنِي فِي الْإِسْلَامِ بِأَمْرٍ لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ. قَالَ: «قُلْ آمَنْتُ بِاللَّهِ، ثُمَّ اسْتَقِمْ» . قَالَ: قُلْتُ: فَمَا أَتَّقِي، فَأَوْمَأَ إِلَى لِسَانِهِ

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ''உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்'' என்று கேட்டார். ''அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள்.  அஹ்மத் (14870) 

【 தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம் 】
┈•••❈• ❀ ••❈•••┈

✍🏻 அன்புள்ளவர்களே தேவையற்ற பேச்சுக்கள் பிரிவினையை உண்டு பண்ணுவதால் அது போன்று பேசாமல் நல்ல விஷயங்களைப் பேசுமாறும் வீணானதை விட்டும் தவிர்ந்து கொள்ளும் படியும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

وَقُلْ لِّعِبَادِىْ يَقُوْلُوا الَّتِىْ هِىَ اَحْسَنُ‌ؕ اِنَّ الشَّيْطٰنَ يَنْزَغُ بَيْنَهُمْ‌ؕ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلْاِنْسَانِ عَدُوًّا مُّبِيْنًا‏

(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான்.. அல்குர்ஆன் (17:53)

وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ وَقَالُوْا لَنَاۤ اَعْمَالُنَا وَلَـكُمْ اَعْمَالُـكُمْ سَلٰمٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِى الْجٰهِلِيْنَ‏

அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து: “எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை” என்று கூறுவார்கள்.  அல்குர்ஆன் (28:55)

وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏

வீணானதைப் புறக்கணிப்பார்கள். அல்குர்ஆன் (23:3)

وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا

அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். அல்குர்ஆன் (25:72)

، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ ""

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.  நூல்: புகாரி (6018)

நாம் நல்ல வார்த்தைகளை மட்டுமே மொழிய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அஹ்மதில் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில், 'நல்லதையே பேசட்டும்' என்ற கட்டளைக்கு முன்பாக 'அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்' என்ற கட்டளையும் சேர்ந்து வருகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்போர் அல்லாஹ்வைப் பயந்து தனது அண்டை வீட்டாரிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து தனது விருந்தினரை கண்ணியமாக நடத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து நல்லதைûயே சொல்லட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும்.  அஹ்மத் (19403)

பொது இடங்களில் மூன்று குரங்குகளை நாம் கண்டிருப்போம். அதில் ஒன்று தீயவற்றைக் கேட்கக் கூடாது என்பதை வ­யுறுத்தும் வண்ணம் தன் காதைப் பொத்திக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பார்க்கக் கூடாது என்பதை எடுத்துரைப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பேசக் கூடாது என்பதற்காக வாயை மூடிக் கொண்டிருக்கும்.

இந்த ஓவியத்தை ஏற்பாடு செய்தவர்கள் வலி­யுறுத்த வரும் செய்தியை ஒரு படி மேல் சென்று இஸ்லாம் எடுத்துரைக்கிறது. தீமையைப் பேசுவதை மட்டும் தடுக்காமல் தேவையில்லாத, பலனில்லாத பேச்சுக்களையும் பேச வேண்டாம் என்கிறது.

ஏனென்றால் ஒன்றுக்கும் உதவாத பேச்சுக்கள் தீமையாக உருவெடுத்து விடுகின்றன என்பதே இதற்குக் காரணம். நம்மால் முடிந்த அளவு பிறருக்கு நன்மையை செய்ய வேண்டும். இயலாவிட்டால் தம் வார்த்தைகளால் பிறரை துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும்.

சிலருடைய பேச்சுக்கள் நம்மைத் தாக்கி அமையாது. என்றாலும் அவர்கள் சம்பந்தமில்லாத பல தகவல்களை பேசிக் கொண்டே இருந்தால் கேட்பவருக்கு அவரது பேச்சு எரிச்சலூட்டும். தன் குடும்ப விஷயங்களைப் பிறரிடத்தில் அடிக்கடி கூறுவதும் அவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.

அதுமட்டுமல்லாமல் பேச்சில் அதிகமானது கழிக்கப்பட வேண்டியவையாக இருந்தால் அவர் கூறும் நல்ல கருத்துக்கள் கூட எடுபடாமல் போய்விடும். அவர் பேசும் எதையும் பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், நன்மையைத் தவிர வேறெதையும் பேசாதே! என்று கட்டளையிட்டார்கள்.

عَن الْبَراء بن عَازِب قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: عَلِّمْنِي عَمَلًا يُدْخِلُنِي الْجَنَّةَ قَالَ: «لَئِنْ كُنْتَ أَقْصَرْتَ الْخُطْبَةَ لَقَدْ أَعْرَضْتَ الْمَسْأَلَةَ أَعْتِقِ النَّسَمَةَ وَفك الرَّقَبَة» . قَالَ: أَو ليسَا وَاحِدًا؟ قَالَ: " لَا عِتْقُ النَّسَمَةِ: أَنْ تَفَرَّدَ بِعِتْقِهَا وَفَكُّ الرَّقَبَةِ: أَنْ تُعِينَ فِي ثَمَنِهَا وَالْمِنْحَةَ: الْوَكُوفَ وَالْفَيْءَ عَلَى ذِي الرَّحِمِ الظَّالِمِ فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ فَأَطْعِمِ الْجَائِعَ وَاسْقِ الظَّمْآنَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ فَإِنْ لم تطق فَكُفَّ لِسَانَكَ إِلَّا مِنْ خَيْرٍ ". رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) ''உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு! தாகித்தவனுக்கு நீர்புகட்டு! நல்லதை ஏவி தீமையைத் தடு! இதற்கும் உன்னால் முடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றி­ருந்தே தவிர (மற்றவற்றி­ருந்து) பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள்.  அஹ்மத் (17902)

【 தீய பேச்சுக்கள் வேண்டாம் 】
┈•••❈• ❀ ••❈•••┈

✍🏻 அன்புள்ளவர்களே கெட்ட பேச்சுக்களைப் பேசுவது இறை நம்பிக்கையாளனிடம் இருக்கக் கூடாத பண்பாகும். மானக்கேடான அருவருக்கத்தக்க காரியங்களைச் செய்வது நல்லவர்களின் பண்பல்ல என்று இறைவன் கூறுகிறான். சிலர் அசிங்கமான, இரு பொருள் தருகின்ற வார்த்தைகளைப் பேசி மகிழ்கிறார்கள். அந்த வார்த்தை ஆபாசத்தை எடுத்துக் காட்டாவிட்டாலும் அதைக் கொண்டு தவறான அர்த்தத்தை நாடுகிறார்கள். இப்படி மறைமுகமாகக் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّىَ الْـفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَ الْاِثْمَ وَالْبَـغْىَ بِغَيْرِ الْحَـقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏

''என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்; நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே; நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக. ! அல்குர்ஆன் (7:33)

நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்குர்ஆன் (16:90)

இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இந்தக் குணத்தை நயவஞ்சகர்களுடையது என்று கூறியுள்ளார்கள்.

عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْحَيَاءُ وَالْعِيُّ شُعْبَتَانِ مِنَ الإِيمَانِ وَالْبَذَاءُ وَالْبَيَانُ شُعْبَتَانِ مِنَ النِّفَاقِ ‏"‏ ‏.‏

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும். திர்மிதி (1950)

நாம் பேசும் பேச்சுக்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் தீர்மானிக்கும் அளவுகோலாக சில நேரத்தில் அல்லாஹ்விடம் கருதப்படுகிறது. எத்தனையோ மோசமான வார்த்தைகள் நாவில் தவழுகின்றன. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சாதாரண பேச்சுக்களைப் போல் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் நாம் விடும் வார்த்தைகள் நமக்கு அற்பமானதாகத் தெரிந்தாலும் அது இறைவனுடைய பார்வையில் படு மோசமானதாகக் கருதப்படலாம். அதனால் நரகத்திற்குச் செல்லும் துர்பாக்கிய நிலையைக் கூட எய்தலாம்.

எனவே சிறிய கெட்ட வார்த்தை, பெரிய கெட்ட வார்த்தை என்றெல்லாம் பாகுபடுத்தாமல் தீயதை முழுமையாகத் தவிர்ந்து கொள்வதே ஏற்புடையது.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ لاَ يُلْقِي لَهَا بَالاً، يَرْفَعُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لاَ يُلْقِي لَهَا بَالاً يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ ""

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.  புகாரி (6478)

அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசுவது நம் பெண்களிடத்தில் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.. ஆனால் நம் சமுதாயப் பெண்களில் சிலர் அந்நிய ஆண்களிடத்தில் குழைந்து பேசுகிறார்கள்.

பேசும் வார்த்தை சரியாக இருந்தாலும் ஒரு ஆணிடத்தில் அதிகமாகப் பேசுவது தீய எண்ணத்தை அவன் மனதில் வளர்க்கும். பெண்கள் ஆண்களால் ரசிக்கப்படுபவர்களாக இருக்கும் போது இருவருக்கும் மத்தியில் பேச்சுத் தொடர்ந்தால் அது நாளைடைவில் தவறான தொடர்பாக உருவெடுத்து விடும்.

பெண் அவ்வாறு நினைக்காவிட்டாலும் சாதாரண ஒவ்வொரு ஆணுடைய எண்ணமும் இப்படித் தான் இருக்கும். நபிமார்களின் மனைவியருக்கு இவ்வாறு அல்லாஹ் உபதேசிக்கிறான்.

يٰنِسَآءَ النَّبِىِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۚ‏

நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.. அல்குர்ஆன் (33:32)

【 மோசமான மனிதர் 】
┈•••❈• ❀ ••❈•••┈

✍🏻 அன்புள்ளவர்களேகெட்ட வார்த்தைகளைப் பேசுபவர்களிடத்தில் பேச்சுக் கொடுக்க நல்லவர்கள் பயப்படுவார்கள். நல்லவர்கள் முன்னிலையில் கேட்க முடியாத வார்த்தையைச் சொல்­ விட்டால், சொல்பவர்களுக்குக் கூச்சமாக இல்லாவிட்டாலும் அதைக் கேட்கும் நாகரீகமானவர்களுக்கு நெருடலாக இருக்கும். இதனால் கெட்ட வார்த்தைகளைப் பேசுவர்களிடம் பேசுவதை நல்லவர்கள் தவிர்த்துக் கொள்வார்கள்.

தான் பேச்சைத் துவங்காவிட்டாலும் அவர்களாகத் துவக்கி விடுவார்கள் என்பதற்காக தீய வார்த்தைகளைப் பயன்படுத்துவோர் இருக்கும் சபைக்கும் வர நல்லவர்கள் அஞ்சுவார்கள்.

தீய வார்த்தைகளால் பிறரை அச்சத்திற்குள்ளாக்குபவரை மோசமானவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ قَالَتِ، اسْتَأْذَنَ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" ائْذَنُوا لَهُ بِئْسَ، أَخُو الْعَشِيرَةِ أَوِ ابْنُ الْعَشِيرَةِ "". فَلَمَّا دَخَلَ أَلاَنَ لَهُ الْكَلاَمَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْتَ الَّذِي قُلْتَ، ثُمَّ أَلَنْتَ لَهُ الْكَلاَمَ قَالَ "" أَىْ عَائِشَةُ، إِنَّ شَرَّ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ ـ أَوْ وَدَعَهُ النَّاسُ ـ اتِّقَاءَ فُحْشِهِ "".

ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்'' என்று சொன்னார்கள். உள்ளே அவர் வந்த போது (எல்லோரிடமும் பேசுவது போல்) அவரிடம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசி விட்டு எழுந்து சென்றதும்) நான், ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே!'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''ஆயிஷா! யாருடைய அருவருப்பான பேச்சுகளி­ருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரை விட்டு மக்கள் ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார்'' (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்) என்றார்கள். புகாரி (6054)

சத்தியக் கருத்துக்களால் மக்களை வென்றெடுத்த நபி (ஸல்) அவர்கள் நல்ல வார்த்தைகளால் தான் இத்தகைய மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இந்த அருமையான குணம் அவர்களைத் தலைவராக சமுதாயம் ஏற்றுக் கொண்டதற்கான முக்கிய காரணமாகும்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاحِشًا وَلاَ مُتَفَحِّشًا وَكَانَ يَقُولُ "" إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلاَقًا "".

நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ''உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே!'' என்று அவர்கள் கூறினார்கள். புகாரி (3559)

【 மூத்தவரை முற்படுத்துதல் 】
┈•••❈• ❀ ••❈•••┈

✍🏻 அன்புள்ளவர்களே கருத்து தெரிவிக்கும் போது முத­ல் பெரியவரைப் பேச விட வேண்டும். ஏனென்றால் அவர்கள் அனுபவம் மிக்கவர்கள். எதை எப்படிக் கையாள வேண்டும் என்ற யுக்தியும் அறிந்தவர்கள். வயதில் மூத்தவர்கள் இருக்கும் போது அவர்களைப் பின்தள்ளி விட்டு இளைஞர்களைப் பேச விடுவது மூத்தவர்களை அவமதித்ததாகவும் கருதப்படும்.

அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவ்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் ஹுவைய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள், ''பெரியவர்களைப் பேசவிடு. பெரியவர்களைப் பேசவிடு'' என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் மௌனமாகி விட்டார்கள். பின்பு முஹய்யிஸா அவர்களும் ஹுவைய்யிஸா அவர்களும் பேசினார்கள்.  புகாரி (3173)

【 தெளிவாகப் பேச வேண்டும் 】
┈•••❈• ❀ ••❈•••┈

✍🏻 அன்புள்ளவர்களேஅவசரம் இல்லாமல் நிறுத்தி நிதானமாக, வார்த்தைகளைத் தெளிவாக உச்சரித்துப் பேசினால் நம்முடையக் கருத்து, கேட்பவர்களிடம் உடனே எடுபடும். நம்முடைய பேச்சிற்கும் ஒரு மதிப்பு கிடைக்கும்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தைப் பேசுகிறார்கள் என்றால் அதை (வார்த்தை வார்த்தையாக எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால் ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக தெளிவாகப் பேசி வந்தார்கள்.)  புகாரி (3567)

நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடம் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பச் சொல்வார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள். புகாரி-95.

【 அமல்களின் பட்டோலை கணக்க‌】
┈•••❈• ❀ ••❈•••┈

عَنِ الزُّبَيْرِؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ أَحَبَّ أَنْ تَسُرَّهُ صَحِيفَتُهُ فَلْيُكْثِرْ فِيهَا مِنَ اْلاِسْتِغْفَارِ

எவருடைய அமல்களின் பட்டோலை (கியாமத் நாளில்) தன்னை மகிழ்விக்க வேண்டுமென விரும்புபவாரோ அவர் அதிகமாக பாவமன்னிப்புத் தேடவும்''  (தபரானீ)

عَنْ عَبْدِ اللهِ بْنِ بُسْرٍؓ يَقُولُ: قَالَ النَّبِيُّ ﷺ: طُوبَي لِمَنْ وَجَدَ فِي صَحِيفَتِهِ اِسْتِغْفَارًا كَثِيرًا

தன் அமல்களின் பட்டோலையில் (கியாமத் நாளன்று) அதிகமாக பாவமன்னிப்புத் தேடுவதை பதிவு செய்யப்பட்டிருக்கும் மனிதருக்கு சுபச் செய்திகள்''  (இப்னு மாஜா 3818)

【 சபதம் எடுங்கள்】.

✍🏻 அன்புள்ளவர்களே! இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து எனது மவ்த் வரைக்கும் வாய்மையோடு இருப்பேன், பேச்சின் ஒழுங்குகளை பேணி வாழுவேன்  ஐ நேரம் இமாம் ஜமாத்தோடு தொழுவேன். ஒவ்வொரு அமல்களிலும் இறை பொருத்தம் பெற முயற்சி செய்து கொண்டே இருப்பேன் என்று.. சபதம் எடுங்கள்

ஆக அல்லாஹ் இவ்வுலகில் வாழும் நம் முஸ்லிம் சமுதாயத்தினரின் தீய அவபெயர்களை விட்டும் நம் அனைவரையும் பாதுகாத்து அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக‌ தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன்.

✍🏻✍🏻நன்றியுரை:- تقبل الله منا ومنكم صالح الأعمال نسأل الله أن ييسر لنا أمورنا ويشرح صدورنا

“‏ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461.

எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!!ஆமீன்.. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

இக்குறிப்புரையின் தலைமையாசிரியர் & இக்குழு கண்காணிப்பாளர்:-

எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா.
உங்களின் துஆக்களை பெற பேராசைப்படும்:-
உஸ்தாதுனா எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா. வாசுதேவநல்லூரி. செல் +919487007358 & ٩٩٤٢٤٠٧٣٥٨ . நான் விவசாயி..

மெளலானா ஹாபிழ் களந்தை.B. அபு அஜ்மல் புகாரி யூசுபி
உதவியாசிரியர்:-
உஸ்தாதுனா மெளலானா ஹாபிழ் களந்தை B. அபு அஜ்மல் புகாரி யூசுபி. செல் +918754089943.

இக்கட்டுரை வெளி வர மஷ்வரா [அலோசனை] தந்த அனைவருக்கும், நம் இணையத்தில் வந்து பயனும் பலனும் அடைந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹூ கைரன்.

https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4

ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﻣﺤﻤﺪ ﻭﻋﻠﻰ ﺁﻟﻪ ﻭﺻﺤﺒﻪ ﻭﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺭﺏ ﺍﻟﻌﺎﻟﻤﻴﻦ

✍🏻✍🏻 எனக்கு இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை எழுத ஊக்கமும், உறுதுணையும், ஒத்துழைப்பும் தந்த ஜுமுஆ முபாரக் தகவல் மேடை உஸ்தாதுக‌ளுக்கும் & திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டார ஜமாத்துல் உலமா சபை உலமா நண்பர்களுக்கும். ஜஸாகல்லாஹ். வஸ்ஸலாம். ✍🏻✍🏻

நமது ஜுமுஆ பயான் தகவலை பெற தங்களின் WATTS APP நம்பரிலிருந்து j-bayan என டைப்செய்து. 9942407358 என்ற WATTS APP என்னுக்குஒரு message அனுப்புங்கள்.
ஜுமுஆ பேருரையின் பயன்பாற்றிற்காக மட்டுமே குறிப்புரையாக தரப்படுகின்றன, இவற்றை அனுமதி இல்லாமல் மறு பிரசுரம் செய்யலாகாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானது.
நமது ஜுமுஆ முபாரக் தகவல் மேடையின் இணையதள முகவரி

https://vellimedaikal.wordpress.com/
நமது ஜுமுஆ முபாரக் தகவல் மேடையின் இமெயில் முகவரி

bayanpdf@gmail.com
உங்களுக்கு பிடித்த தலைப்பில் PDF வடிவில் பயான் குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய..

https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4

ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﻣﺤﻤﺪ ﻭﻋﻠﻰ ﺁﻟﻪ ﻭﺻﺤﺒﻪ ﻭﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺭﺏ ﺍﻟﻌﺎﻟﻤﻴﻦ


ஜஸாகல்லாஹ். ஜுமுஆ முபாரக் தகவல் மேடை உலமாக்கள். வஸ்ஸலாம்
நமது ஜுமுஆ முபாரக் தகவல் மேடையின் முகநூல் முகவரி

https://www.facebook.com/profile.php?id=100009486147372

நமது ஜுமுஆ முபாரக் தகவல் மேடையின் Google + முகவரி

https://plus.google.com/u/0/105334692200015285184

உங்களுக்கு பிடித்த தலைப்பை தேர்வு செய்ய கீழே உள்ள லிங்கை ஒரு க்ளிக் செய்யுங்க..

https://vellimedaikal.wordpress.com/2016/10/02/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை/

பேச்சின் ஒழுங்குகள் பற்றி இஸ்லாம்pdf.

பேச்சின் ஒழுங்குகள் பற்றி இஸ்லாம்word

கருத்துகள் இல்லை:

http://www.smhowsee.blogspot.in/

ஜஜாக்கல்லஹு கைரா. - அல்ஹம்துலில்லாஹ்

நன்றி மீண்டும் வருக எனக்கு துஆ செயுங்கள்

அஸ்ஸலாமுஅலைக்கும்வரஹ்மதுல்லாஹிவபரகாதுஹு.