பக்கங்கள்

بسم الله الرحمن الرحيم الحمدلله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته بارك الله بكم و سدد خطاكم

அன்பு நண்பர்களுக்கு.... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. எனக்கு மிக்க மகிழ்ட்சி நீங்கள் என் இணையதளத்திர்க்கு வந்ததற்கு - அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்

மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்
மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

நோன்பு எனும் இறைத்தேர்வில் எனது தக்வா-சுயபரிசோதனை...

 

📚 أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 📚

🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

♣ ஏப்ரல் – 2023 –07 – ந் தேதி ஹிஜ்ரி–1444 – [رمضان]  ரமலான்    மாதம் – 15–ம் தேதி  மூன்றாம் வார ஜுமுஆ பேருரையின் குறிப்புரை வெளியீட்டு எண்: 181 [டிஜிடல் முறை - 25]  ♣

Download PDF OLD

Download PDF new

களக்காடு-மாநகர-உலமாக்கள்-20170412_060322.jpg.jpg

بسم الله، والحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز; {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ۞ ‌ۖ‏‏‏} -[سورة البقرة2 - عدد آياتها(183) ] - صدق الله العظيم / قال رسول الله ﷺ «وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ " مُتَّفَقٌ عَلَيْهِ. » .."‏ ‏ »‏‏ [إلخ], الى آخره, (رَوَاهُ البخاري (8)، ومسلم (16).] [ أو كما عبر الرسول صلى الله عليه وسلم

✍🏻✍🏻 ஜுமுஆ குறிப்புரையின் தலைப்பின் விளக்கம்:- நோன்பு எனும் இறைத்தேர்வில் எனது தக்வா-சுயபரிசோதனை....!!!  அதாவது:- நாம் ரமலான் மாதத்தின் 30 நாட்களும், நோன்பு எனும் தேர்வை எழுதிக்கொண்டிருக்கிறோம். அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவராக உள்ளோமா ? அல்லது தேர்வராக உள்ளோமா ? என தனக்குத்தானே சீர்திருத்தம் செய்து சுயப்பரிசோதனை. செய்தல்    சம்பந்தமாக‌ “ஜுமுஆ குறிப்புரை”   . 

துவக்கவுரை: المقد مة INTRODUCTION :-

✍🏻 அன்புள்ளவர்களே ல்லாஹ்வின் பேரருளால்  [ رمضان  ]   மளான் மாதத்தின் மூன்றாம்  வார ஜுமுஆவில்  , இறைவனுக்கும் பிடித்தமான நோன்பை நோற்ற நோன்பாளியாகவும், இறைவனுக்கும் பிடித்த இல்லமான இறையில்லத்திலும் அமர்ந்திருக்கிறோம், ல்ஹம்துலில்லாஹ். 

✍🏻 அன்புள்ளவர்களே! இன்றோடு சேர்த்து 15 நாட்கள் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்திருக்கிறோம்.  நாம் இதுவரைக்கும் வைத்த அனைத்து நோன்புகளையும், அமல்களையும், அல்லாஹ் அங்கிகரிப்பானாக! ஆமீன். 

இன்னும்  மீதமுள்ள எல்லா நோன்புகளையும், இதர வணக்க, வழிபாடுகளையும், எவ்வித தடங்கல் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!. என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.

✍🏻 அன்புள்ளவர்களே! ரமலானின் முதல் பத்தான ‘ரஹ்மத்‍துடைய பத்தை நிறைவு செய்துவிட்டோம். ரமலானின் இரு பகுதிகளில் முதற் பகுதியான 15- நோன்பை இன்றோடு நிறைவு செய்கிறோம். இன்னும் பாதி நாட்கள் / கொஞ்ச நாட்கள்தாம் உள்ளன ரமலான் முடிய. ஆக மீதியுள்ள நாட்களை பயனுள்ள நாட்களாக ஆக்கிட முயற்ச்சி செய்வோமாக !

ரமலானின் இரண்டாம் பத்தான ‘மக்ஃபிரத்’ எனும் பாவமன்னிப்புடைய பத்துவின்  நடுப்பகுதியில் உள்ளோம். அல்லாஹ்விடத்தில் அதிகமாக اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَخَطَايَانَا كُلَّهَا يا رَبَّ العـالَمـين، என்ற துஆவை அதிகமாக ஓதி கொள்வோமாக !. டுத்தாக 

✍🏻 அன்புள்ளவர்களே!  இன்றைய ஜுமுஆ‍வுடைய‌ பேருரையில் :-

நாம் ரமலான் மாதத்தின் 30 நாட்களும், நோன்பு எனும் தேர்வை எழுதிக்கொண்டிருக்கிறோம். அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவராக உள்ளோமா? அல்லது தேர்வராக உள்ளோமா ? என தனக்குத்தானே சீர்திருத்தம் செய்து சுயப்பரிசோதனை. செய்தல் சம்பந்தமாக‌   இன்றைய ஜுமுஆ உரையில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்……

✍🏻 பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும், கேட்ட‌தின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வ‌ல்ல நாயகன்  ﷻ  நம்மனைவருக்கும் தந்த‌ருள்புரிவானாக! ஆமீன்  ✍🏻  என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈.

♣ அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:-  قال الله تعالى ♣

【ஆசிரியரின் குறிப்புஅன்புள்ள உஸ்தாதுகளே!! தாங்கள் ஜுமுஆ பேருரையாற்றும் போது; கீழுள்ள‌ குர்ஆன் வசனங்களை ஓதும் போது கிராஅத்தாக ஓதுங்கள்.

 يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் [அல்குர்ஆன் 2:183]

நபி  அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم ♣

روى البخاري (1904) ومسلم (2119) عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : (قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلاَّ الصِّيَامَ هُوَ لِي وَأَنَا أَجْزِي بِهِ  . . . الحديث ) .

"நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!'" என அல்லாஹ் கூறுகின்றான். روى البخاري (1904) ومسلم (2119)

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ يَقُولُ اللَّهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلأٍ ذَكَرْتُهُ فِي مَلأٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ إِلَىَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِنْ تَقَرَّبَ إِلَىَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً ‏"

என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன். [ஸஹிஹ் புஹாரி 7405] 

[பாவமன்னிப்பு செம்ம OFFER ஆஃப்பர்:-]

✍🏻 அன்புள்ளவர்களே நாம் ரமலானுக்கு டிரஸ் எடுக்க போரோம். அங்கு ஒரு ஆடைக்கு, ஒரு ஆடை ஃப்ரினு சொன்ன எப்படி கடையில கூட்டம் அலை மோதுமோ? அது போல; ரப்புல் ஆலமீன் நம்முடைய பாவங்களை மன்னிக்க ஒரு ஆஃப்பராக இந்த மாதத்தை தந்துள்ளான். ஆக நாமும் அக்காலங்களை பயன்படுத்தி பாவ மன்னிப்புக்களை பெற முயற்சிக்க வேண்டும்.

عَنْ جَابِرٍؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: إِنَّ فِي اللَّيْلِ لَسَاعَةً لاَ يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ يَسْاَلُ اللهَ خَيْرًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَاْلآخِرَةِ إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ وَذلِكَ كُلَّ لَيْلَةٍ.

“நான் நபி அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது. அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளைக் கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவுகளிலுமாகும்” என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَي كُلَّ لَيْلَةٍ إِلَي سَمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقي ثُلُثُ اللَّيْلِ اْلآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ؟ مَنْ يَسْاَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ له؟

ஒவ்வொரு இரவிலும் மூன்றிலொரு பகுதி எஞ்சியிருக்கும்போது நம்முடைய இரட்சகன் உலக வானத்திற்கு இறங்கி, என்னிடம் துஆக் கேட்பவர் யார்? அவர் துஆவை நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னிடம் கேட்ப்பவர் யார்? நான் அவருக்கு கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்பவர் யார்? நான் அவருக்கு மன்னிப்பு வழங்குகிறேன்” என்று கூறுகிறான், என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 1125)

[இரண்டாம் பத்தான 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புடைய பத்து நாட்கள்:-]

✍🏻 அன்புள்ளவர்களேமகத்துவம் நிறைந்த புனித ரமலானுக்கு ‘பாவமன்னிப்பு தேடப்படும் மாதம்’ என்ற சிறப்பும் உண்டு.

ஒரு நோன்பாளி தான் அறிந்தோ-அறியாமலோ, தெரிந்தோ-தெரியாமலோ, வெளிப்படையாகவோ- மறைமுகமாகவோ, மனம் விரும்பியோ-விரும்பாமலோ செய்த சிறிய, பெரிய தவறுகளுக்கும், பாவங்களுக்கும் கண்டிப்பாக பாவமன்னிப்பு கோர வேண்டும்.

மேலும் முஸ்லிம்களாக இறந்து போன பெற்றோர், உற்றார், உறவினர், அண்டை அயலார், சகோதர - சகோதரியர், தற்காலத்தில் வாழும் உலக முஸ்லிம்கள், காலம் கடந்து சென்ற முஸ்லிம்கள் என அனைவருக்கும் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேட வேண்டும்.

பாவமன்னிப்புத் தேடுவதற்கு நேரமோ, காலமோ, கிழமையோ, மாதமோ குறிக்கப்படவில்லை. பாவமன்னிப்பு எப்பொழுதும் தேடலாம். எனினும் புனித ரமலான் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், பாவமன்னிப்பு வேண்டுவதற்கும் ஒரு விசேஷமான மாதமாகும். எனவே இந்த புனித ரமலானில் கூடுதலாக கவனம் செலுத்தி அதிகமாக பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.

ரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள ‘இரண்டாவது பத்து’ பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவங்கள் மன்னிக்கப்படும் பகுதியாகவும் அமைந்துள்ளது. எனவே ரமலான் காலத்தில் முடிந்தளவு நோன்பாளிகள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்று புண்ணியங்கள் தேடி புறப்பட்டு, புது மனிதர்களாகவும், புனிதர்களாகவும் மாற்றம் பெற வேண்டும்.

புனித ரமலான் மாதம் முழுவதும் பாவமன்னிப்பு தேடுவதற்குரிய நாட்களாக உள்ளது. 

பொதுவான மனிதன், சிலவேலை பாவங்களை தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யக்கூடியவனாகவே இருக்கின்றான். ஆதலால் அல்லாஹுத்தஆலா தன்அடியார்களின் பாவங்களை எப்பொழுதும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். மேலும், அப்படி பாவமன்னிப்பு வேண்டுபவர்களை தான்விரும்புவதாகவும் அல்குர்ஆனிலே பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்;

اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏ (البقرة : 222)

“நிச்சயமாக அல்லாஹுத்தஆலா பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கின்றான். இன்னும், தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (அல்பகரா 222)

وَهُوَ الَّذِىْ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِه وَيَعْفُوْا عَنِ السَّيِّاٰتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُوْنَ (الشورى : 25)

”அவன்தான் தன் அடியார்களின் பாவமன்னிப்பு கோறுதலை ஏற்றுக்கொள்கின்றான், அவர்களின் குற்றங்களை மன்னிக்கின்றான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.” (அஷ்ஷுறா 25)

ஸஹர் நேரத்தில்…

وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ

அவர்கள் இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள் (அல்குர்ஆன் 51:18)

اَلصّٰــبِرِيْنَ وَالصّٰدِقِــيْنَ وَالْقٰنِتِــيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ‏

(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்]  (அல்குர்ஆன் 3:17)

இந்த வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றி சொல்லும் போது, ஸஹர் நேரத்தில் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனங்களுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் பிற்பகுதியில் பாவமன்னிப்பு தேடுவதை வலியுறுத்தியுள்ளார்கள்.

புனித ரமலானில் அதிகமாக பாவமன்னிப்பு தேடுதல், துஆ பிரார்த்தனைகள் செய்தல்.

عَنْ أَنَسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ. 

ஆதமுடைய மக்கள் ஒவ்வொருவரும் பாவம் செய்பவர்களே! பாவம் செய்பவரில் சிறந்தவர் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்பவர்” (திர்மிதீ 2499)

-عَنْ عَبْدِ اللهِ بْنِ بُسْرٍؓ يَقُولُ: قَالَ النَّبِيُّ ﷺ: طُوبَي لِمَنْ وَجَدَ فِي صَحِيفَتِهِ اِسْتِغْفَارًا كَثِيرًا

தன் அமல்களின் பட்டோலையில் (கியாமத் நாளன்று) அதிகமாக பாவமன்னிப்புத் தேடுவதை பதிவு செய்யப்பட்டிருக்கும் மனிதருக்கு சுபச் செய்திகள்”  (இப்னு மாஜா 3818 )

 عَنْ أَبِي بَكْرِنِ الصِّدِّيقِؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا أَصَرَّ مَنِ اسْتَغْفَرَ وَإِنْ عَادَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً

தன் பாவங்களுக்கு மன்னிப்புத் தேடிக்கொண்டிருப்பவர் பாவங்களில் நிலைத்திருப்பவராகக் கருதப்படமாட்டார். ஒரு நாளைக்கு அவர் எழுபது முறை பாவம் செய்தாலும் சரியே” (அபூதாவூத் 1514)

عَنِ الزُّبَيْرِؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ أَحَبَّ أَنْ تَسُرَّهُ صَحِيفَتُهُ فَلْيُكْثِرْ فِيهَا مِنَ اْلاِسْتِغْفَارِ

எவருடைய அமல்களின் பட்டோலை (கியாமத் நாளில்) தன்னை மகிழ்விக்க வேண்டுமென விரும்புபவாரோ அவர் அதிகமாக பாவமன்னிப்புத் தேடவும்”  ( والبيهقي في ((شعب الإيمان)) (648)،)

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكِبَرَ فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ 

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுவதாவது: ஒருமுறை ரஸூல்  அவர்கள் மிம்பர் படிகளில் ஏறும்போது ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!!  என்று கூறினார்கள். (வழமைக்கு மாறாக) இன்று ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், (கீழ்வருமாறு) பதில் கூறினார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கீழ்வரும் மூன்று விடயங்களைக் கூறினார்கள்.

யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’ என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன். [திர்மிதீ, அஹ்மத்] 

ரமழான் மாதம் பாவ மன்னிப்புக்குரிய மாதமாகும். இதில் பல சந்தர்ப்பங்களிலும் பல நேரங்களிலும் அல்லாஹ் லட்சக்கணக்கான மக்களை மன்னிக்கிறான். உதாரணமாக - ஒவ்வொரு நாளும் இப்தாரின்போது, லைலதுல் கத்ர் இரவில்.  எனவே மாதம் முழுவதும் எல்லா நேரங்களிலும் நிறைய பாவ மன்னிப்பு தேட வேண்டும்.

[முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி அவர்கள் 'மக்ஃபிரத்'  பாவமன்னிப்பு தேடியது:-]

✍🏻 அன்புள்ளவர்களே!    முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி அவர்கள் ஒரு நாளில் 100  /  எழுபது தடவைக்கு மேல் பாவமன்னிப்பு தேடியுள்ளார்கள். அப்பரம் அனு தினமும் பாவத்திலே முழ்கி இருக்கும் நாம் ஒரு நாளைக்கு எத்தனை தடவை பாவமன்னிப்பு தேட வேண்டும். என்பதனை கொஞ்சம் சிந்தியுங்கள்?.

لِّيَـغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَ مَا تَاَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيْمًا ۙ‏

அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள்.

6307- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ : قَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ وَاللَّهِ إِنِّي لأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் “அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.: புகாரி-6307

7033 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَبُو الرَّبِيعِ الْعَتَكِىُّ جَمِيعًا عَنْ حَمَّادٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ عَنْ أَبِى بُرْدَةَ عَنِ الأَغَرِّ الْمُزَنِىِّ – وَكَانَتْ لَهُ صُحْبَةٌ – أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِى وَإِنِّى لأَسْتَغْفِرُ اللَّهَ فِى الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ

எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். : முஸ்லிம்-5234 (4870)

7034 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ أَبِى بُرْدَةَ قَالَ سَمِعْتُ الأَغَرَّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- يُحَدِّثُ ابْنَ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللَّهِ فَإِنِّى أَتُوبُ فِى الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ

“மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்-5235 (4871)

எப்போதும் இறைச் சிந்தனையில் இருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளம் கொஞ்சம் அந்தச் சிந்தனையை விட்டு விலகினால் கூட அதற்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். ஆனால் நாம் சிறு சிறு பாவங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளோம். அன்றாடம் ஆயிரக்கணக்கான பாவங்களைச் செய்து விட்டு கல்லாக உட்கார்ந்திருக்கின்றோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது கிடையாது.  இது போன்ற பாவங்களை விட்டு விலகுவதுடன் அன்றாடம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி அதற்குரிய பலன்களை அடைய வேண்டும். ஆதலால் இன்றே பாவமன்னிப்பு தேடுவோம்.. இந்த பாவமன்னிப்பிற்க்குறிய 10 நாட்களை பயனுள்ளதாக்கிடுவோமாக ! ஆமீன்,

[இரண்டாம் பத்தான 'மக்ஃபிரத்' எனும் பத்தை வீணாக்கியவர்களின் நிலை:-]

✍🏻 அன்புள்ளவர்களே!  நபி  அவர்களால் ‘நாசமாகட்டும்’ என்று சபிக்கப்பட்டவர்கள் யாரென்று தெரிவோமா?

கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு,  நபி அவர்கள், இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள். தன்னுடைய வாழ்நாளில், பற்பல துன்பங்களை அடைந்த போதும், நபி அவர்கள் ஒரு சில சந்தர்ப்பத்தை தவிர்த்து, பிறரை சபித்ததே இல்லை.

தாயிப் நகரத்து மக்களுக்கு, இஸ்லாத்தை எடுத்தியம்புவதற்காக  சென்றபோது, சொல்லொனா துயரங்களுக்கு உட்படுத்தப்பட்டு, சிறுவர்களை ஏவி கல்லால் அடிக்கப்பட்டு, துரத்தப்பட்டு, தாயிஃபை அடுத்து ஒரு தோட்டத்திலே, உடல் எல்லாம் இரத்தம் வழிந்தேட அம்ர்ந்திருக்கும்போது, இறைவனின் கட்டளையின் பேரில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் நபி அவர்கள் முன் தோன்றி, மிகப்பெரிய இரண்டு மலைகளையும் ஒன்றாக இணைத்து, இந்த மக்களை அதிலே நசுக்கிவிடவா என்று கேட்டார்கள். அப்போதுகூட மாநபி அவர்கள், ‘வேண்டாம் இவர்கள் இல்லை என்றாலும் இவர்களின் சந்ததியினர் ஓரிறைவனை வணங்கக் கூடியவர்களாக் வருவார்கள்’ என்று சொல்லி, தாயிஃப் நகர மக்களின் மீது கருனையை பொழிந்தார்கள்.

பத்ருப்போரில் பிடிபட்ட போர்க் கைதிகளை, உயிரோடு விடக்கூடாது என்று உமர் (ரலி) அவர்கள் உட்பட சொன்னபோது,  ஒவ்வொரு கைதியும் பத்து சிறுவர்களுக்கு எழுதப்படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் மீது கருணை பொழிந்தார்கள்.

மக்கத்து வெற்றியின்போது, தன்னை இந்த மண்ணில் இருந்து விரட்டியடித்தவர்களை, இன்று உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை, அபூ ஸுஃப்யானின் வீட்டில் தஞ்சம் அடைந்தவர்களுக்கும் பாதுகாப்பு என்று அவர்கள் மீது கருணை பொழிந்தார்களே தவிர அவர்களை சபிக்கவில்லை.

இப்படியாக இந்த உம்மத்தினர்மீது கருணையை பொழிந்த நபி அவர்கள், ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சிலரை சபித்துள்ளார்கள். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம்தான் ரமழானை அடைந்து பாவமன்னிப்பு பெறாதவர். ரமழான் மாதம் பாவமன்னிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை கீழ்கண்ட ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

وَعَنْهُ] عَنْ أَبِي هُرَيْرَةَ  قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكبر أَو أَحدهمَا فَلم يدْخلَاهُ الْجنَّة» . رَوَاهُ التِّرْمِذِيّ

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறுவதாவது: ஒருமுறை ரஸூல்  அவர்கள் மிம்பர் படிகளில் ஏறும்போது ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!!  என்று கூறினார்கள். (வழமைக்கு மாறாக) இன்று ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், (கீழ்வருமாறு) பதில் கூறினார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து கீழ்வரும் மூன்று விடயங்களைக் கூறினார்கள்.

யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும் என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன்.

பின்னர், ‘யார் பெற்றோர் இருவரையும், அல்லது அவ்விருவரில் ஒருவரை அடைந்துகொண்டு, அவர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம் சுவர்க்கத்தை அடைந்து கொள்ளவில்லையோ அவரும் நாசமாகட்டும்’ என்றார். அதற்கு நான் ‘ஆமீன்’ என்றேன்.

‘உங்களுடைய பெயர் சொல்லக்கேட்டு, உங்கள் மீது யார் ஸலவாத்துச் சொல்லவில்லையோ அவரும் அழிந்து நாசமாகட்டும்’ என்றார். அதற்கும் ‘ஆமீன்’ என்றேன். [திர்மிதீ, அஹ்மத் Mishkat al-Masabih 927 ] 

ஆகையால், இறைவன் நம் அனைவரையும் சபிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஆக்காமல்,  பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஆக்கி அருள வேண்டும்.  அதற்காக வரக்கூடிய புனித மிக்க ரமழான் மாதத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

[இரண்டாம் பத்தில் அதிகமாக ஓதிடுவோம் :-] 

✍🏻 அன்புள்ளவர்களே  நாம்  ரமலானின்  இரண்டாம் பத்தில் இருப்பதினால்;   ரமலானின் இரண்டாம் பத்து நாட்களில்  ஓத வேண்டிய துஆவை அதிகமாக ஓதிடுவோமாக!.

اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَخَطَايَانَا كُلَّهَا  يا رَبَّ العـالَمـين،

Allahum Maghfirlana Zunubana Wa Qatayana Kullaha Ya Rabbal Aalameen"

அல்லாஹும் மக்பிர்லனா துனுபனா வ கத்தாயானா குல்லஹா யா ரப்பல் ஆலமீன்”

ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. [இப்னு குஜைமா பாகம் 3 எண் 191]  

இந்த ஹதீஸின் அடிப்படையையும் நாம் கவனத்தில் கொண்டு  இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.

[ஒரு சொட்டு கண்ணிர் ரப்புக்கு பிடிக்கும்:-]

✍🏻 அன்புள்ளவர்களே    இப்பாவ மன்னிப்பு நிறைந்த 2 ம் பத்தில் இருக்கின்ற நாம் மனமுறுகி ஒவ்வொரு நேரமும் பிரார்திக்க வேண்டும்.

நாம் துஆ கேட்கும் போது அழுது துஆ கேட்க்க வேண்டும். இல்லையென்றால் அழுவதைப்போல பாசங்கு செய்ய வேண்டும்.

، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ قَطْرَتَيْنِ وَأَثَرَيْنِ قَطْرَةٌ مِنْ دُمُوعٍ فِي خَشْيَةِ اللَّهِ وَقَطْرَةُ دَمٍ تُهَرَاقُ فِي سَبِيلِ اللَّهِ ‏.‏ وَأَمَّا الأَثَرَانِ فَأَثَرٌ فِي سَبِيلِ اللَّهِ وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِنْ فَرَائِضِ اللَّهِ ‏"‏ ‏.‏‏(‏‏(‏رواه الترمذي‏.‏وقال ح حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏‏)‏‏)‏‏ .

இரண்டு துளிகள் இரண்டு அடையாளங்கள் ஆகியவற்றைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது எதுவும் இல்லை.1 அல்லாஹ்வுக்கு பயந்து வடிக்கும் கண்ணிர் துளிகள். அல்லாஹ்வின் வழியில் சிந்திய ரத்த துளிகள். [திர்மிதி 1669]

كَانَ عُثْمَانُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ فَقِيلَ لَهُ تُذْكَرُ الْجَنَّةُ وَالنَّارُ فَلاَ تَبْكِى وَتَبْكِى مِنْ هَذَا فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ ». قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ ». قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ هِشَامِ بْنِ يُوسُفَ

உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்குச் சென்றால் தனது தாடி நினைகின்ற அளவிற்கு அழுவார்கள். சொர்க்கம் நரகத்தைப் பற்றி சொல்லப்படும் போது நீங்கள் அழுவதில்லை. ஆனால் இதற்காக (மண்ணறைக்கு வந்தால்) அழுகிறீர்களே என்று அவர்களிடத்தில் கேட்கப்பட்டது. அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மண்ணறை என்பது மறுமையில் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் அடியான் தப்பித்துவிட்டால் இதற்குப் பின்பு உள்ள (நிலை) இதை விட இலகுவாக இருக்கும். இதில் அவன் வெற்றிபெறவில்லையானால் இதற்குப் பிறகுள்ள (நிலை) இதை விட கடுமையாக இருக்கும். மண்ணறைகளில் (நடக்கும்) காட்சியை விட மோசமான எந்த ஒரு காட்சியையும் நான் பார்க்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதீ-2308 (2230)

[புனித ரமலானில் நம்முடைய‌ ஜகாத் / ஸதகா அமல் ஓர் பரி சோதனை:-]

[ஏழைகளுக்கு உதவு. இறைவனை காணலாம்:-]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِن الله عز وَجل يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ قَالَ: أَمَّا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي قَالَ: يَا رَبِّ كَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي؟ يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِي قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟ قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ أما إِنَّك لَو سقيته لوجدت ذَلِك عِنْدِي ". ‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?" என்று கேட்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்" என்று கூறுவான்.

மேலும் அல்லாஹ், "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை" என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.

மேலும் "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை" என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான். [முஸ்லிம் 5021].

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! மகத்தான நன்மையுடைய தர்மம் எது?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்முடைய தந்தைமீது அறுதியாக! அது குறித்து நிச்சயம் உமக்கு விளக்கமளிக்கப்படும். நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பணத்தேவை உடையவராகவும், வறுமையை அஞ்சியவராகவும் நீண்டநாள் வாழவேண்டுமென எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது, நீங்கள் செய்யும் தர்மமே (மகத்தான நன்மை தரக்கூடியதாகும்). உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டிருக்க, இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்); இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்)" என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்! (ஏனெனில்,) அப்போது உங்கள் செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிருக்கு உரியதாகிவிட்டிருக்கும்" என்று பதிலளித்தார்கள். [முஸ்லிம் 1871]

[முகஸ்துதிக்காக நோன்பு வேண்டாம். சதக்காவும் வேண்டாம் :-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

✍🏻 அன்புள்ளவர்களே! நம்முடைய நோன்பும், ஸதகாவும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும் பிறரின் புகழ், பெருமைக்காக செலவு செய்தால் ஒரு கூலியும் கிடைக்காது.

தங்களது பொருளை ஏழைகளுக்கு செலவு செய்யும்போது அதை சொல்லிக் காண்பித்து ஏழைகளின் கண்ணியத்தை காயப்படுத்துபவர்களை அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான். முகஸ்துதி கலந்துவிட்டால் அவ்வணக்கம் வீணாகிவிடும்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰىۙ كَالَّذِىْ يُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ‌ؕ لَا يَقْدِرُوْنَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوْا ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ‏

விசுவாசிகளே! நீங்கள் உங்களுடைய தர்மத்தை (ப் பெற்றவனுக்கு) இகழ்ச்சியையும், துன்பத்தையும் (செய்வது) கொண்டு (அதன் பலனை) வீணாக்கிவிடாதீர்கள். அவ்வாறு (செய்பவன்) அல்லாஹ்வையும் கடைசி நாளையும் விசுவாசம் கொள்ளாது (தான் தர்மவான் என்பதைப் பிற) மனிதர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தன் பொருளை செலவு செய்து (வீணாக்கி) விட்டவனுக்கு ஒப்பாவான். அவனுடைய உதாரணம்; ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன்மீது மண் படிந்தது. எனினும் ஒரு பெரும் மழை பொழிந்து அதை (க் கழுவி) வெறும் பாறையாக்கிவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்). ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததிலிருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:264)

ஏழைகளுக்கு தான் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது, அந்த தர்மத்தின் நற்பலன்களை வழுக்குப் பாறையில் ஒட்டியிருந்த மணலை பெரும் மழை அடித்துச் சென்று விடுவதுபோல அழித்து விடுகிறது. புகழுக்காக தர்மம் செய்பவர் அல்லாஹ்வின் நேர்வழிக்குத் தகுதியற்றவர், அவர் நிராகரிப்பாளர்களுடன் இணைக்கப்பட்டு விடுவார் என்பதை இந்த வசனத்தின் பிற்பகுதி சுட்டிக் காட்டுகிறது.

(وَمَا تُنْفِقُوْنَ اِلاَّ ابْتِغَاءَ وَجْهِ اللهِ۞).

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடுவதற்கேயன்றி (பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். (அல்பகரா:272)

[முகஸ்துதியி (புகழ்விரும்புதலி)ன் இழிவு :-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

شَدَّادِ بْنِ اَوْسٍؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ صَلَّي يُرَائِيْ فَقَدْ اَشْرَكَ، وَمَنْ صَامَ يُرَائِيْ فَقَدْ اَشْرَكَ، وَمَنْ تَصَدَّقَ يُرَائِيْ فَقَدْ اَشْرَكَ

மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் தொழுதாரோ, அவர் நிச்சயமாக இணை வைத்துவிட்டார், மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் நோன்பு நோற்றாரோ, அவர் நிச்சயமாக இணை வைத்துவிட்டார், மற்றவர்வர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக எவர் தர்மம் செய்தாரோ, அவர் நிச்சயமாக இணைவைத்துவிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஷத்தாதிப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்)

தெளிவுரை:- எவர்களுக்குக் காட்டவேண்டுமென்பதற்காக அமல் செய்தாரோ, அவர்களை அல்லாஹுதஆலாவுக்கு இணையாக ஆக்கிவிட்டார். இந்நிலையில் இந்த அமல்கள் அல்லாஹுதஆலாவுக்காக இல்லாமல் எவர்களுக்கு காட்டவேண்டும் என்று செய்தாரோ அவர்களுக்காக ஆகிவிடுகிறது. இதைச் செய்தவர் நன்மைக்குப் பதிலாக வேதனைக்கு உரியவராகிவிடுகிறார் என்பதாம்.

عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّ اَوَّلَ النَّاسِ يُقْضي يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ، رَجُلٌ اُسْتُشْهِدَ،فَاُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعْمَتَهُ، فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيْهَا؟ قَالَ: قَاتَلْتُ فِيْكَ حَتَّي اسْتُشْهِدْتُ، قَالَ: كَذَبْتَ، وَلكِنَّكَ قَاتَلْتَ لِأَنْ يُقَالَ جَرِيْءٌ، فَقَدْ قِيْلَ، ثُمَّ اُمِرَ بِهِ فَسُحِبَ عَلي وَجْهِهِ حَتَّي اُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ وَعَلَّمَهُ وَقَرَاَ الْقُرْآنَ، فَاُتِيَ بِهِ، فَعَرَّفَهُ نِعَمَهُ، فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيْهَا؟ قَالَ: تَعَلَّمْتُ الْعِلْمَ وَعَلَّمْتُهُ وَقَرَاْتُ فِيْكَ الْقُرْآنَ، قَالَ: كَذَبْتَ وَلكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ عَالِمٌ، وَقَرَاْتَ الْقُرْآنَ لِيُقَالَ هُوَ قَارِئئٌ، فَقَدْ قِيْلَ، ثُمَّ اُمِرَ بِهِ فَسُحِبَ عَلي وَجْهِهِ حَتَّي اُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ وَسَّعَ اللهُ عَلَيْهِ وَاَعْطَاهُ مِنْ اَصْنَافِ الْمَالِ كُلِّهِ، فَاُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ، فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيْهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيْلٍ تُحِبُّ اَنْ يُنْفَقَ فِيْهَا اِلاَّ اَنْفَقْتُ فِيْهَا لَكَ، قَالَ: كَذَبْتَ، وَلكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ هُوَ جَوَادٌ، فَقَدْ قِيْلَ، ثُمَّ اُمِرَ بِهِ، فَسُحِبَ عَلي وَجْهِهِ، ثُمَّ اُلْقِيَ فِي النَّارِ.

கியாமத் நாளில், முதன்முதலாக தனக்குப் பாதகமான தீர்ப்பை பெறுபவர்களில் அல்லாஹ்வுடைய பாதையில் உயிரிழந்தவரும் ஒருவர், அல்லாஹுதஆலாவுக்கு முன் அவரைக் கொண்டுவரப்படும், அவருக்குக் கொடுக்கப்பட்ட அருட்பாக்கியங்களை அல்லாஹுதஆலா எடுத்துக் கூறுவான், அவரும் அதை ஒப்புக் கொள்வார்.இந்த பாக்கியங்களுக்காக நீ என்ன செய்தாய்?” என்று அல்லாஹுதஆலா கேட்பான். நான் உன்னுடைய பொருத்தத்திற்காகப் போரிட்டு உயிரிழந்தேன்” என்பார். நீ பொய் சொல்கிறாய், மக்கள் உன்னை வீரனேன்று சொல்லவேண்டும் என்பதற்காகப் போர் செய்தாய், அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டது” என்று அல்லாஹுதஆலா கூறுவான். பிறகு அவருக்கு முன் தீர்ப்பு வாசிக்கப்பட்டு, அவர் முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் வீசியெறியப்படுவார். இரண்டாவது மனிதர், மார்க்கக் கல்வி கற்று பிறருக்கும் கற்பித்தவர். மேலும், குர்ஆன் ஓதியவர், அவர் அல்லாஹுதஆலாவின் முன் கொண்டுவரப்படுவார். அவருக்குக் கொடுக்கப்பட்ட பாக்கியங்களை அல்லாஹுதஆலா எடுத்துரைப்பான், அவரும் ஒப்புக்கொள்வார். இந்த பாக்கியங்களுக்காக நீ என்ன வேலை செய்தாய்?” என அல்லாஹுதஆலா அவரிடம் கேட்பான். நான் உனது பொருத்தத்திற்காக மார்க்கக் கல்வி கற்று, பிறருக்கும் கற்பித்தேன், உனது பொருத்தத்திற்காகவே சிறப்புமிகு குர்ஆனை ஓதினேன்” என்பார் அவர். நீ பொய் சொல்கிறாய்! மக்கள் உன்னை ஆலிம் என்று சொல்லவேண்டும் என்பதற்காக இல்மைக் கற்றாய். மக்கள் உன்னை காரீ என்று சொல்ல வேண்டும் என்பதற்காக குர்ஆனை ஓதினாய், அது அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டது” என்பான். பிறகு, அவருக்கு முன் தீர்ப்பு வாசிக்கப்பட்டு, அவர் முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகில் தூக்கியெறியப்படுவார். மூன்றாவது மனிதர் செல்வந்தர், அவருக்கு அல்லாஹுதஆலா உலகில் மிகுந்த செல்வம் கொடுத்திருந்தான், மேலும், அனைத்து வசதிகளையும் வழங்கியிருந்தான், அவர் அல்லாஹுதஆலாவுக்கு முன் கொண்டுவரப்படுவார். அவருக்கு கொடுக்கப்பட்ட பாக்கியங்களை அல்லாஹுதஆலா எடுத்துக் கூறுவான். அவர் அதை ஒப்புக் கொள்வார். இந்த பாக்கியங்களுக்காக நீ என்ன வேலை செய்தாய்?” என அல்லாஹ் கேட்பான், நீ செலவழிக்கச் சொன்ன வழிகளிலெல்லாம் நீ கொடுத்த பொருளை உன் பொருத்தத்திற்காகச் செலவிட்டேன்” என்று சொல்வார். நீ பொய் சொல்கிறாய் மக்கள் உன்னைக் கொடை வள்ளல் எனச் சொல்லவேண்டும் என்பதற்காக நீ செலவழித்தாய், அவ்வாறே சொல்லப்பட்டுவிட்டது” என்பான். பிறகு அவருக்கு முன் தீர்ப்பு வாசிக்கப்பட்டு, அவர் முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் வீசியெறியப்படுவார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ قَيْسِ نِ الْخُزَاعِيِّؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنْ قاَمَ رِيَاءً وَسُمْعَةً لَمْ يَزَلْ فِيْ مَقْتِ اللهِ حَتَّي يَجْلِسَ.

பிறர் பார்க்க வேண்டும் அல்லது புகழ் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு எவர் நல்ல காரியத்தில் ஈடுபடுவாரோ, அவர் அந்த எண்ணத்தை விடாதவரை அல்லாஹுதஆலாவின் கடும் வெறுப்புக்கு ஆளாகி இருப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு கைஸ் குஸாயீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தப்ஸீர் இப்னுகஸீர்)

[ரமலானில் ஜகாத்:-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

اِنَّمَا يَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَ قَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةَ وَلَمْ يَخْشَ اِلَّا اللّٰهَ‌ فَعَسٰٓى اُولٰۤٮِٕكَ اَنْ يَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِيْنَ‏

எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வை அன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இத்தகையவர்கள்தாம் நேரான வழியில் இருப்பவர்கள். [9:18]

اِنَّمَا وَلِيُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَالَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رَاكِعُوْنَ‏

நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம். [5:55.]

[ஜகாத் பெற தகுதிகள்:-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِيْنِ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغٰرِمِيْنَ وَفِىْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِ‌ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். [9:60.]

[தொழுகையைப் பேன்றே ஜகாத்தும் மிக முக்கிய கடமை:-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

ஒருவர் தொழுகிறார். அவர் மீது ஜகாத் கடமையாக இருந்தும் நிறைவேற்றவில்லை எனில் அவரது தொழுகையை அல்லாஹ் ஒப்புக்கொள்ள மாட்டான் என முபஸ்ஸிர்கள் கூறுகிறார்கள். நான் சேர்த்த்து வைத்தை பிரிக்க நீ யார் என அல்லாஹ் கேட்பதாக அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.

[ஜகாத்தை கடமையாக்கில் மூன்று தத்துவங்கள் இருக்கின்றன:-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

  1. அல்லாஹ் செல்வந்தனை சோதிக்கிறான், இவன் தனக்காக வாழ்கிறானா? தன் சொல்படி வாழ்கிறானா? وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ உ حُبِّهِ உடைய ضمير அல்லாஹ் என முப்தி முஹம்மது ஷபீ சாஹிப் அவர்கள் மஆரிபுல் குர் ஆனில் கூறுகிறார். அப்படியானால் அல்லாஹ்வின் மீதான நேசத்தில் தர்மம் செய்பவர் என்று பொருள்.
  2.  இதயத்தில் கஞ்சத்தனம் பேராசை படியாமல் பாதுகாக்கிறது.
  3.  சமூகத்தில் ஏழை பணக்காரகளுக்கிடையே அமைதி நிலவுகிறது.

உள்ளார்த்தமாக ஜகாத் கொடுப்பவர்களுக்கு இந்த மூன்று வகையான நனமைகள் கிடைக்கின்றன. அத்தோடு சமுதாயமும் நனமை அடைகிறது.

ரமலானின் இந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப்படுகிற முக்கியமான ஒரு கடமை ஜகாத் ஆகும்.

ரமலானில் நிறைவேற்றினால் அதிக நன்மை கிடைக்கும் என்பதால் ரமலானில் நிறைவேற்றுகிறோம். எப்பபோது கடமையாகிறதோ அப்போது ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்.

அதே போல ரமலானில் கொடுக்காவிட்டால் ரமலான் முடிந்த பிறகு ஜகாத்தை நிறைவேற்றிட வேண்டும். சிலர் இந்த ரமலானில் கொடுக்க இயலாவிட்டால் அடுத்த ரமலானில் தான் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அது தவறு.

அரசாங்கத்திற்கு கணக்கு காட்டாமல் வைக்கப்படுகிற சொத்து எப்படி கருப்பு பணமாகிறதோ அது போல ஜகாத் நிறைவேற்றப்படாத சொத்து நாம் பதுக்க்கப்பட்ட சொத்தாகிவிடும்.

[குர்ஆன் எச்சரிக்கிறது:-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

يَّومَ يُحْمٰى عَلَيْهَا فِىْ نَارِ جَهَـنَّمَ فَتُكْوٰى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْ‌ؕ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ

(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). [9:35]

[யார் மீது கடமை:-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

அடிப்படை தேவைகள், கடன், எல்லாம் போக மேலதிகமாக ஒருவரிடம் 84 கிராம் தங்கம் (10½ பவுன்) அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர் அதற்கு முழுமையாக ஜகாத் கொடுக்க வேண்டும். (இன்றைய 03/04/2023) விலைப்படி 10½ பவுனின் விலை 4,62,384 ரூபாய்கள் ஆகும்.

சுமார் 612 கிராம் வெள்ளிக்கு நிகரான தொகை சுமார் 47,120 ஆயிரம்ரூபாய் கையிருப்பில் வைத்திருப்பவர் மீது ஜகாத் கடைமையாகும்.

தங்களிடம் இருக்கும் மொத்த தொகையை / நகையை 40 ஆல் வகுத்தால் ஈவு என்ன கிடைக்குமோ அந்த தொகையை ஜகாத்தாக நிறைவேற்றிட வேண்டும்.

[ரமலானில் ரகசிய தர்மம்:-]
┈•••❈• ❀ ••❈•••┈┈

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجْوَدُ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ‏.‏

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி(ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்’ [ஸஹிஹ் புஹாரி 6]

தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமையின் அர்ஷின்) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அதில் ஒருவன்

وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّي لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்தவன். புகாரி – 6806, 1423.

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: قَالَ رَجُلٌ: لَأَ تَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِيْ يَدِ سَارِقٍ، فَأَصْبَحُوْا يَتَحَدَّثُوْنَ: تُصُدِّقَ عَلي سَارِقٍ، فَقَالَ: اَللّهُمَّ لَكَ الْحَمْدُ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِيْ يَدِ زَانِيَةٍ، فَأَصْبَحُوْا يَتَحَدَّثُوْنَ: تُصُدِّقَ اللَّيْلَةَ عَلي زَانِيَةٍ، فَقَالَ: اَللّهُمَّ لَكَ الْحَمْدُ، عَلي زَانِيَةٍ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِيْ يَدِ غَنِيٍّ، فَاَصْبَحُوْا يَتَحَدَّثُوْنَ: تُصُدِّقَ عَلي غَنِيٍّ، فَقَالَ: اَللّهُمَّ لَكَ الْحَمْدُ عَلي سَارِقٍ، وَعَلي زَانِيَةٍ، وَعَلي غَنِيٍّ، فَاُتِيَ فَقِيْلَ لَهُ: اَمَّا صَدَقَتُكَ عَلي سَارِقٍ فَلَعَلَّهُ اَنْ يَسْتَعِفَّ عَنْ سَرِقَتِهِ، وَاَمَّا الزّانِيَةُ فَلَعَلَّهَا اَنْ تَسْتَعِفَّ عَنْ زِنَاهَا، وَاَمَّا الْغَنِيُّ فَلَعَلَّهُ اَنْ يَعْتَبِرَ، فَيُنْفِقَ مِمَّا اَعْطَاهُ اللهُ.

(பனீ இஸ்ராயிலைச் சேர்ந்த) ஒரு மனிதர் (இன்று இரவு இரகசியமாக நான்) தர்மம் செய்வேன்’ என்று தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டார். அவ்வாறே, இரவில் ஸதகாப் பொருளை எடுத்துக் கொண்டு வெளியேறினார், விவரம் அறியாமல் இரகசியமாக ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். (நேற்றிரவு) திருடனுக்கு ஸதகா கொடுக்கப்பட்டுள்ளது’ என்று மறுநாள் காலையில் மக்களிடையே (பேசப்பட்டது) ஸதகாச் செய்தவர். யா அல்லாஹ்!, (திருடனுக்கு ஸதகா போய்ச் சேர்ந்ததற்கும்) உனக்கே புகழ் அனைத்தும்! (இல்லையென்றால் அவனைவிடவும் கெட்ட மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் நான் என்ன செய்ய முடியும்?) என்று சொன்னார். பிறகு, அவர் முந்திய ஸதகா வீணாகிவிட்டது, இன்று இரவு(ம்) ஸதகா செய்வேன்” என உறுதி கொண்டார். அதன்படியே இரவில் ஸதகாப் பொருளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். (விபரம் அறியாமல்) ஒரு விபச்சாரிக்கு அந்த ஸதகாவைக் கொடுத்துவிட்டார். நேற்றிரவு விபச்சாரிக்கு ஸதகா கொடுக்கப்பட்டுள்ளது’ என மறுநாள் காலையில் மக்களுக்கிடையே பேசப்பட்டது. யா அல்லாஹ்! விபச்சாரிக்கு (ஸதகா போய்ச் சேர்ந்ததில்) உனக்கே புகழ் அனைத்தும்” (என்னுடைய பொருள் அதற்கும் தகுதியானதல்லவே!) என்று கூறினார். பிறகு (மூன்றாம் முறையாக) இன்று இரவு அவசியம் ஸதகாச் செய்வேன்” என்று உறுதி கொண்டார். அவ்வாறே, இரவில் ஸதகாப் பொருளை எடுத்துக்கொண்டு புறப்பட்டவர், அதை ஒரு பணக்காரனுடைய கையில் கொடுத்துவிட்டார். நேற்றிரவு செல்வந்தருக்கு ஸதகா கொடுக்கப்பட்டிருக்கிறது’ என மறுநாள் காலையில் மக்களுக்கிடையே பேசப்பட்டது. ஸதகாக் கொடுத்தவர், யா அல்லாஹ்! திருடன், விபச்சாரி, செல்வந்தர் ஆகியோருக்கு ஸதகாவைச் சேர்த்ததற்கு, உனக்கே புகழ் யாவும்! (என் பொருள் இத்தகையவர்களுக்குக் கொடுக்கவும் தகுதியற்றது) எனக் கூறினார். அவருக்கு கனவில், (உன்னுடைய ஸதகா ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது) திருடனுக்கு உனது ஸதகா(வை கொடுக்க வைத்ததின் காரணம்) அவன் திருந்தி தவ்பாச் செய்து திருட்டை விட்டுவிடலாம் என்பதற்காகவே! விபச்சாரிக்கு, அவள் விபச்சாரத்திலிருந்து தவ்பா செய்துவிடலாம். விபச்சாரம் செய்யாமலும் நமக்கு அல்லாஹுதஆலா கொடுத்திருக்கிறான் என்பதைப் பார்த்து அவளுக்கு ரோஷம் வரும் என்பதற்காக ஸதகாவை கொடுக்க வைக்கப் பட்டது. செல்வந்தருக்கு அவர் (அல்லாஹுதஆலாவின் அடியார்கள் எவ்வாறெல்லாம் ரகசியமாக ஸதகாச் செய்கிறார்கள் என்ற) படிப்பினை பெற்று, அல்லாஹுதஆலா தனக்குக் கொடுத்த பொருளிலிருந்து அவரும் (அல்லாஹுதஆலாவின் பாதையில்) செலவு செய்யலாம் என்பதற்காக ஸதகாவைக் கொடுக்கவைக்கப்பட்டது” என சொல்லப்பட்டது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [ஸுனன் நஸாயீ 2523]

 الصدقةُ تُطفئُ الخطيئةَ كما يُطفئُ الماءُ النارَ.

தண்ணீர் நெருப்பை அணைத்துவிடுவது போல ரகசிய தர்மம் பாவத்தை அழித்துவிடுகிறது.

عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: صَدَقَةُ السِّرِّ تُطْفِيءُ غَضَبَ الرَّبِّ. » [صحيح الترغيب]

ரகசிய தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடுகிறது. துர்மரணத்தைத் தடுத்துவிடுகிறது.

[இரு மடங்கு கூலி:-]

✍🏻 அன்புள்ளவர்களே! நமது உறவினர்கள் ஏழைகளாக இருந்தால் அவர்களை இழிவாகக் கருதாமல் அவர்களிடம் உறவைப் பேணி, அவர்களுக்குத் தர்மம் செய்தால் அதற்கு இரு மடங்கு கூலி கிடைக்கும்.

நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்த போது, "அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்து விட்டேனே! அறிவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ (விடுதலை) செய்து விட்டாயா?” என்று கேட்க, நான், "ஆம்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும்” என்று கூறினார்கள். புகாரி 2592

وأَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَتْبَعُ الْمَيِّتَ ثَلاَثَةٌ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ فَيَرْجِعُ اثْنَانِ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى وَاحِدٌ عَمَلُهُ.‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏ ‏‏‏.‏

ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனுடைய செயல்பாடு நின்று விடுகின்றது. மூன்று விஷயங்களை தவிர. 1. நிலையான தர்மம், 2. பயனளிக்கக் கூடிய கல்வி, 3. அவருக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை. முஸ்லிம் 1631

இன்னும் ஏராளமான நன்மைகள் தர்மத்தின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. சிறு துளி பெரு வெள்ளமாக ஆவதைப் போன்று நம்மால் முடிந்த சிறு சிறு தர்மங்களைச் செய்து அதிகமான நன்மைகளைப் பெற அல்லாஹ் அருள் செய்வானாக!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும் உடனே, அவர்கள் எழுவார்கள் (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும். (புகாரி) என்று நபிகளார் கூறினார்கள்.

கருணை உள்ளம் கொண்ட இறைவனே ! உன் அளவில்லா கருணையை எங்கள் மீதும் பொழிந்து உன் மன்னிப்பை மட்டுமே ஆதரவு வைத்துள்ள எங்களின் குற்றம் குறைகளை மன்னித்து நோன்பாளிகளான எங்கள் அனைவர்களையும் ரய்யான் என்ற வாசல் வழியாக சுவர்க்கத்தில் சேர்த்து விடுவாயாக ஆமீன். வஸ்ஸலாம்.

【 சபதம் எடுங்கள்…】

✍🏻 அன்புள்ளவர்களேமேற் சொன்னவாறு ரமலான் மாதத்தின் 30 நாட்களிலும், நோன்பு எனும் தேர்வை எழுதிக்கொண்டிருக்கிற‌ நான் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவராக ஆகுவோன். என்று. அல்லாஹ் ﷻ  அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக‌ தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன். وآخر دعوانا أن الحمد لله رب العالمين

🏻🏻நன்றியுரை:-  تقبل الله منا ومنكم صالح الأعمال نسأل الله أن ييسر لنا أمورنا  ويشرح صدورنا

 “‏ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461.

எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!! ஆமீன்.. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

இக்குறிப்புரை வெளி வர உதவி செய்த‌  அனைவருக்கும், நம் இணையத்தில் வந்து பயனும், பலனும் அடைந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹு கைரா.

" ஆக‌ ந‌ம் நோன்பினை அலங்கரிப்போம்!! ஆரோக்கியமா{க்]குவோம்!!! வல்ல நாயகன் அருள்புரிவானாக! ஆமீன்.… " 

வஸ்ஸலாம் 

இக்குறிப்புரையின் தலைமையாசிரியர் & இக்குழு கண்காணிப்பாளர்:-

உங்களின் துஆக்களை பெற பேராசைப்படும்:-11

உஸ்தாதுனா எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா. வாசுதேவநல்லூரி. செல் +917402127136 & ٩٩٤٢٤٠٧٣٥٨ நான்  விவசாயி..

மெளலானா ஹாபிழ் களந்தை.B. அபு அஜ்மல் புகாரி யூசுபிஉதவியாசிரியர்:-

உஸ்தாதுனா மெளலானா ஹாபிழ் களந்தை B. அபு அஜ்மல் புகாரி யூசுபி. செல் +918754089943. 

ஜுமுஆ பேருரையின் பயன்பாற்றிற்காக மட்டுமே இக்குறிப்புரை தரப்படுகின்றன, இவற்றை  அனுமதி இல்லாமல் மறு பிரசுரம் செய்யலாகாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானது.

உங்களுக்கு பிடித்த தலைப்பில் PDF வடிவில் பயான் குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய..

https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4

********** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين ************

✍🏻✍🏻  நன்றியுரை :-  ✍🏻✍🏻

எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!! ஆமீன்.. அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

இக்குறிப்புரை வெளி வர உதவி செய்த‌  அனைவருக்கும், நம் இணையத்தில் வந்து பயனும், பலனும் அடைந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹு கைரா.

உங்களுக்கு பிடித்த தலைப்பில் PDF வடிவில் பயான் குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய..

https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4

********** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين ************

 

உங்களுக்கு பிடித்த தலைப்பில் PDF வடிவில் பயான் குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய..

https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4

********** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين ************

வஸ்ஸலாம் https://vellimedaikal.wordpress.com/2021/03/15/10284/

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈

மே-2019-03-ந் தேதி. ஹிஜ்ரி-1440- ஷஃபான்-27-ந் தேதி நான்காம் வார ஜுமுஆ பேருரையின் குறிப்புரை. வெளியீட்டு எண்: 065.

அடுத்தாக நாளை முதல் மூன்றாம் பத்து ஆரம்பமாக உள்ளதால் நரகத்திலிருந்து பாதுகாவல் தேடுதல், சுவனத்தை வேண்டுதலான    اللهم أعتقنا من النار و أدخلنا الجنة يا رب العالمين  பிரார்தனையை அதிகமாக செய்ய வேண்டும்.

புதன், 8 மார்ச், 2023

சிறு நேரத்தில் பெரு நன்மைகளைச் சம்பாதிப்போம்.

 

📚 أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 📚

🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

♣ மார்ச் – 2022 –25 – ந் தேதி ஹிஜ்ரி–1443 – [شعبان]   ஷஃபான்    மாதம் –21–ம் தேதி   மூன்றாம்  வார ஜுமுஆ பேருரையின் குறிப்புரை வெளியீட்டு எண்: 179 [டிஜிடல் முறை - 23]  ♣

Download PDF

images

بسم الله، والحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز; {اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ‌ ۖ  وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ۞ ‌ۖ‏‏‏} -[سورة النور - سورة24  - عدد آياتها 15 ] - صدق الله العظيم / ورَحِم الله محمدَ بن المنكدر الذي عندما حَضَرَتْه الوفاةُ بَكَى، فقِيل له ما يُبكيك؟ فقال: واللهِ ما أبْكِي ذَنباً أذنبْتُه، لكنَّني أخشى أنْ أكونَ أتيتُ شيئاً حَسِبْتُه هَيناً وهو عند الله عظيم..(إحياء علوم الدين: الغزالي، 6/116) »

[தலைப்பின்  விளக்கம் : சிறு நேரத்தில் பெரு நன்மைகளைச் சம்பாதிப்போம்!!” சின்ன. சின்ன பொடி கற்கள்தான் மலையாகிறது என்பது போல: சின்ன. சின்ன அமல்கள்தான் சுவர்கத்தில் மிகப்பெரிய மலையாக காட்சியளிக்கும்.   எந்த ஒரு நன்மையையும் சாதாரணமாக கருதி / அசால்டாக  விட‌ வேண்டாம். இன்னும் நமக்கு அதிக நன்மை தேவைப்படுகிறது  சம்பந்தமாக‌  ஜுமுஆ குறிப்புரை.] 

♣ துவக்கவுரை:  [المقد مة] INTRODUCTION 

✍🏻 அன்புள்ளவர்களே! ல்லாஹ்வின்  பேரருளால் [شعبان]   ஃபான்   மாதத்தின் மூன்றாம் வார  ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். ல்ஹம்துலில்லாஹ் ..

✍🏻 அன்புள்ளவர்களே! நாமெல்லாம் ரமலானுக்கு தயாராகி கொண்டிருக்கிறோம். இந்த‌ ரமலானில் நாம் அதிக நன்மைகளைப் பெற  சில இலகுவான  சின்ன சின்ன அமல்கள் இருக்கின்றன அவைகளை செய்தால் நமது பட்டோலைகளை ஈசியாக‌ கணக்கச் செய்து விடலாம். [உதாரணமாக: பரிட்சையில் வரும் 1 மார்க் கொஸ்டின் போல ] அவைகளை நாம் தெரிந்து கொண்டு வரக்கூடிய ரமலானில் போட்டி போட்டு அமல் செய்வோமாக!

✍🏻 அன்புள்ளவர்களே!  சமீப காலமாக இஸ்லாமிய சமூக மக்களிடையே சிறிய பாவமாகத்தானே இருக்கிறது, சிறிய‌ / எளிய அமலாகத்தானே இருக்கிறது என்று  துச்சமாகக் கருதுகிற மனோ நிலை காணப்படுகிறது . இதுதான் இந்த விபரீத போக்கிற்கு அடிப்படை காரணம் ஆகும்.

எந்த ஒரு சின்ன நன்மையான செயல் நம்மை சுவனத்திற்கு அழைத்துச் செல்லும், எந்த ஒரு சின்ன பாவமான செயல் நம்மை நரகின்  பாதாளத்திற்கு அழைத்துச் என எவருக்கும் தெரியாது.

நன்மையோ, பாவமோ அதன் அளவைக் கொண்டு குறைவாக மதிப்பிடுகிற  விபரீதப் போக்கு நம் ஈமானையும், ஈமானிய அடிப்படையிலான வாழ்வையும் ஆட்டிப்பார்க்கிற ஆற்றலும், வலிமையும் கொண்டது என்பதை முதலில் நாம் உணர்ந்தாக வேண்டும், ஆக தேனி போல சிறுக சிறுக நன்மைகளை சேர்த்து மறுமையில் அதிக‌ நற்போருகளை பெறுவோமாக? ஆமீன்  ✍என துஆச் செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்….

பார்பதற்க்கு சின்ன சின்ன அமல்கள் ஆனால் கிடைப்பது பெறும் பெறும் வெகுமதிகள் :-

சிறு நேரத்தில் பெரு நன்மைகளை சம்பாதிப்போம்.

✍🏻 அன்புள்ளவர்களே நாம் நற்செயல்களை போட்டி போட்டு செய்வதன் மூலம்தான் சுவனத்திற்குள் இலகுவாக நுழைய முடியும் ஆக‌ பல்வேறு சின்னஞ்சிறு அமல்களில் பென்னம் பெரும் நன்மைகளை இஸ்லாம் வைத்துள்ளது. 

மனிதர்களில் பெரும்பான்மையினர் எல்லா செயல்களும் விரைவாக அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். எவ்வளவு பெரிய வேலையும் சொற்ப நேரத்தில், இலகுவாக முடிந்து விடுவதையே அதிகமானோர் விரும்புகின்றனர்.

அதனாலேயே சமையல் வேலையை எளிதாக்கித் தரும் மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டுப் பொருள்களுக்கும், பயண நேரத்தை மிச்சப்படுத்தும் பைக், இரயில் போன்றவை உள்ளிட்ட அனைத்து நவீன சாதகங்களுக்கும் மக்களுக்கு மத்தியில் தனிமவுசு இருப்பதைக் காண முடிகிறது.

முப்பதே நாட்களில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் எனும் தலைப்பிலான புத்தகங்கள் அதிகம் விற்பனையாவதும், ஒரு நிமிடத்தில் பாஸ்போர்ட் போட்டா என்று விளம்பரம் செய்யப்படும் கடைக்குத் தனியாக மக்கள் கூட்டம் மொய்ப்பதும் சீக்கிரத்தில் அதிக பலன் கிடைக்க வேண்டும் என்ற பெரும்பான்மை மக்களின் மன நிலையைக் கண்ணாடியாய் பிரதிபலிக்கின்றது.

மக்களின் இந்த மனநிலையைப் பறைசாற்றும் அடையாளங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் என்றாலும் விஷயம் அதுவல்ல. இவ்வாறாக எல்லாவற்றிலும் சொற்ப நேரத்தில் அதிக பலன் கிடைக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு இறைவனிடத்தில் நன்மைகளைப் பெறுவதற்கு இதுமாதிரியான வழிமுறைகள் உண்டா? என்று கேட்டால் ஆம் என்பது தான் அதற்குச் சரியான பதிலாகும்.

مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌ ۚ وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ

ஒரு நன்மைக்குப் பத்து கூலிகள் தருவதை (அல்குர்ஆன் 6:160) வழக்கமாக வைத்திருக்கும் இறைவனிடம் இது போன்ற சலுகைகள் இல்லாமலிருக்குமா?

நபிகள் நாயகம் கற்றுத் தந்த நல்லறங்களிலும் சொற்ப நேரத்தில் அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும்படியான ஏராளமான வழிபாடுகளை அறிய முடிகிறது. அவ்வகையிலான சில நன்மைகளை நாம் தெரிந்து கொள்வோமா?.

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈

♣ அல்லாஹ் []  திருமறையில் கூறுகின்றான்:-  قال الله تعالى 

✍🏻 அன்புள்ளவர்களே! நாம் ஒரு அமலை சின்ன அமல்தானே என்று சாதாரணமாக‌ நினைக்கிறோம் ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கிறது.

اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ‌ ۖ  وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْم

இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும். (அல்குர்ஆன்: 24: 15 )

 நபி  அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم 

ورَحِم الله محمدَ بن المنكدر الذي عندما حَضَرَتْه الوفاةُ بَكَى، فقِيل له ما يُبكيك؟ فقال: واللهِ ما أبْكِي ذَنباً أذنبْتُه، لكنَّني أخشى أنْ أكونَ أتيتُ شيئاً حَسِبْتُه هَيناً وهو عند الله عظيم..(إحياء علوم الدين: الغزالي، 6/116)

முஹம்மது இப்னு முன்கதிர் (ரலி அவர்கள் மரணதருவாயில் இருக்கும் போது அழுதார்கள் ஏன் அழுகிறீர் என்று வினவிய போது அவர்கள் நான் செய்த பாவத்தை நினைத்து அழவில்லை .மாறாக இறைவனிடத்தில் பெரியதாக இருக்கும் விஷயத்தை நான் லேசாக கருத்திருப்பேனோ என்ற பயத்தினால் அழுகிறேன் என்று பதிலுரைத்தார்கள் ...

 وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طليق»

ல்லதை எதையுமே குறைத்து மதிப்பிடாதீர்கள்..

 عن أنس  عن رسولِ اللَّهِ ﷺ قَالَ: يتْبعُ الميْتَ ثلاثَةٌ: أهلُهُ ومالُه وعمَلُه، فيرْجِع اثنانِ ويبْقَى واحِدٌ: يرجعُ أهلُهُ ومالُهُ، ويبقَى عملُهُ متفقٌ عَلَيهِ

இறந்தவரை முன்று காரியங்கள் பின் தொடர்ந்து செல்கின்றன, அவற்றில் இரண்டு திரும்பிவிடும், ஒன்று மட்டும் மைய்யித்துடன் தங்கிவிடும், அவனுடைய உறவினர், அவனுடைய செல்வம், அவனுடைய செயல்கள். அவனுடைய உறவினரும், செல்வமும் திரும்பிவிடுவர், பிறகு அவனுடைய நல்லமல் மட்டும் அவனுடனே தங்கிவிடுகிறது’’ (முஸ்லிம்) 

عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَحَبُّ الأَعْمَالِ إِلَى اللَّهِ تَعَالَى أَدْوَمُهَا وَإِنْ قَلَّ قَالَ وَكَانَتْ عَائِشَةُ إِذَا عَمِلَتِ الْعَمَلَ لَزِمَتْهُ

நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். அது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் சரியே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [முஸ்லிம் 1436]

، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" سَدِّدُوا وَقَارِبُوا، وَاعْلَمُوا أَنْ لَنْ يُدْخِلَ أَحَدَكُمْ عَمَلُهُ الْجَنَّةَ، وَأَنَّ أَحَبَّ الأَعْمَالِ أَدْوَمُهَا إِلَى اللَّهِ، وَإِنْ قَلَّ ""

நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீகள்.) அறிந்துகொள்ளுங்கள்: உங்கள் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோருக்கு அழகிய கூ­லி உண்டு. நமது கட்டளைகளில் எளிதானதை அசொர்க்கம் புக முடியும்.) நற்செயல்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். [புகாரி 6464]

அல்லாஹ்  ஒருவனுக்கு நலவை நாடினால் :

عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا اسْتَعْمَلَهُ ‏"‏ ‏.‏ فَقِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ ‏"‏(11625)

அல்லாஹ் ﷻ ஒரு அடியானுக்கு நல்லவை நாடினால் நற்கருமங்கள் செய்வதிலே அவனை ஈடுபடுத்துவான். [திர்மிதி  2142]

சிறிய அமலாக இருப்பினும் அது வீண்போகாது:-

✍🏻 அன்புள்ளவர்களே!  பள்ளியில் ரிஸல்ட் வெளியான நேரம் 1 மார்க்குள, இரண்டு மார்க்கல போயிடுச்சே என கை சேதப்பட்டு பிரயோஜனம் கிடையாது. உனக்கு தேர்வுக்கு முன்னால் உள்ள நேரத்தை முறையாக பயன்படுத்தி படித்திருந்தால் புலம்ப வேலையில்லை.

                தேர்தலுக்கு முன் உள்ள பிரச்சாரக்காலம், போட்டியின் களம், பரிட்சைக்கு முன் உள்ள நேரத்தை முறையாக பயன்படுத்தாதவர்கள் பின்னால் படுகிற கைசேதத்தை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இவைகள் எல்லாம் அல்லாஹ்வின் ஏற்பாடுதான் போலும், சங்கையானவர்களே!

                எதிர்கால வாழ்வில் வளத்தை விரும்பும் ஒவ்வொருவருமே தனது அன்றாட தேவைகளுக்கு மட்டும் உழைக்காமல் அலுவல் நேரத்துக்கும் அப்பால் பார்ட் டைம், சைடு பிசினஸ் என்று பல வழிகளில் உழைத்து வருமானத்தைப் பெருக்கி சேமித்து வைக்கிறார்கள். அவ்வாறே மறுமை வாழ்வு வளமாக இருக்க வேண்டுமென்று விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் கடமையான அமல்களைச் செய்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் நபி (ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்ட உபரியான வணக்கங்களையும் அதிகமாகச் செய்து வரவேண்டும். எனவே தான் அல்லாஹ்வும் (நபிலான) உபரியான வணக்கங்களைச் செய்வதற்கு அதிகம் ஆர்வமூட்டுகிறான்.

وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ‌ؕ

 (மரணத்திற்கு முன்னதாக) உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முற்கூட்டி அனுப்பி வைப்பீர்களோ, அதனை அல்லாஹ்விடம் மறுமையில் பெற்றுக் கொள்வீர்கள். (2:110)

உபரியான வணக்கங்களை நபில் தானே என்று அலட்சியப்படுத்தி விடக்கூடாது. ஏனெனில் சிறிய அமலாக இருப்பினும் அது வீண்போகாது என்பது குர்ஆனின் கூற்றாகும்.

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். 99:7

 وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ

அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். 99:8

எவர் ஒரு அணுவளவு நன்மை செய்தாலும் அவர் (அங்கு) அதனைக் காண்பார். (99:7) மற்றொரு இடத்தில் அல்லாஹ் இப்படிக் கூறுகிறான். எவர் முஃமினாக இருக்கும் நிலையில் நற்செயல்கள், செய்கின்றாரோ அவரின் முயற்சி (எவ்விதத்திலும்) நிராகரிக்கப்பட மாட்டாது. நிச்சயமாக நாம் அவைகளைப் பதிவு செய்து வருகிறோம். (21:94)

முதல் தகுதி (மனத்தூய்மை)

✍🏻 அன்புள்ளவர்களே குறைந்த நேரத்தில் அதிகமான நன்மைகளைப் பெற வேண்டும் என்று ஆசை கொள்வதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன் முக்கியமாக நம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதுதான் மனத்தூய்மை.

செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்காக என்ற மனத்தூய்மையுடன் செய்யும் போதே அல்லாஹ்விடம் அதற்குரிய கூலியைப் பெற முடியும் என்பதை எப்போதும் மறந்து விடக் கூடாது.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّ‌ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِؕ قَالَ لَاَقْتُلَـنَّكَ‌ؕ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ

ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. “நான் உன்னைக் கொல்வேன்” என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். “(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்” என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார். (அல்குர்ஆன் 5:27)

" إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: [புகாரி 1]

எனவே சரியான இறைநம்பிக்கையுடனும், மனத்தூய்மையுடனும் இந்நன்மைகளைப் புரிந்தால் அல்லாஹ்விடம் அதிக நன்மைகளைப் பெற்றிடலாம் என்பதில் சந்தேகமே இல்லை. அவற்றை இனி காண்போம்.:-

 சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட

✍🏻 அன்புள்ளவர்களே!  உளூச் செய்த நிலையில் பாங்கிற்குப் பிறகு அஷ்ஹது அன் லாயிலாஹ என்று துவங்கும் துஆவை ஓதினால் சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படும் என்று நபிகள் நாயகம் சொல்கிறார்கள்.

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ كَانَتْ عَلَيْنَا رِعَايَةُ الإِبِلِ فَجَاءَتْ نَوْبَتِي فَرَوَّحْتُهَا بِعَشِيٍّ فَأَدْرَكْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمًا يُحَدِّثُ النَّاسَ فَأَدْرَكْتُ مِنْ قَوْلِهِ ‏"‏ مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ مُقْبِلٌ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ إِلاَّ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ ‏"‏ ‏.‏ قَالَ فَقُلْتُ مَا أَجْوَدَ هَذِهِ ‏.‏ فَإِذَا قَائِلٌ بَيْنَ يَدَىَّ يَقُولُ الَّتِي قَبْلَهَا أَجْوَدُ ‏.‏ فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ قَالَ إِنِّي قَدْ رَأَيْتُكَ جِئْتَ آنِفًا قَالَ ‏"‏ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ - أَوْ فَيُسْبِغُ - الْوُضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ إِلاَّ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ ‏"‏ ‏.‏

நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்து வந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள், “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை” என்று கூறுவதை நான் கேட்டேன்.

உடனே நான் “என்ன அருமையான வார்த்தை!” என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் “இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது” என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம். [முஸ்லிம் 397]

சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படுவது விலை மதிக்க இயலாத நன்மை என்பதும், அதற்குரிய வழிமுறையாகச் சொல்லப்பட்டது மிக எளிமையானது என்பதும் சொல்லிப் புரிய வேண்டியதில்லை.

 ஒரு நாளுக்கு ஆயிரம் நன்மைகள் ..

✍🏻 அன்புள்ளவர்களே! நாளொன்றுக்கு ஆயிரம் நன்மைகளை அள்ளித் தரும் மிக எளிதான வழிபாட்டை நபிகள் நாயகம் பின்வரும் நபிமொழியில் கற்றுத்தருகிறார்கள். அதை உளமாறப் படித்து அது எவ்வளவு எளிதானது என்பதை நீங்கள் உணரும் போது சுப்ஹானல்லாஹ் என்று கூறத் தயங்க மாட்டீர்கள்.

وَقَالَ صلى الله عليه وسلم: أَيَعْجِزُ أَحَدُكُم أَنْ يَكْسِبَ كُلَّ يَوْمٍ أَلْفَ حَسَنَةٍ؟ فَسَأَلَهُ سَائِلٌ مِنْ جُلَسَائِهِ كَيْفَ يَكْسِبُ أَحَدُنَا أَلْفَ حَسَنَةٍ؟ قَالَ: يُسَبِّحُ مِائَةَ تَسْبِيحَةٍ، فَيُكتَبُ لَهُ أَلْفُ حَسَنَةٍ أَوْ يُحَطُّ عَنْهُ أَلْفُ خَطِيئَةٍ.

நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், “உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?” என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், “எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை (“சுப்ஹானல்லாஹ்’ என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன” என்று சொன்னார்கள். [முஸ்லிம் 5230]

 கையளவு தர்மம் – மலையளவு கூலி

✍🏻 அன்புள்ளவர்களே! தூய்மையான சம்பாத்தியத்தில் மதிப்பில் குறைந்த பொருளை சிறிய அளவு தர்மம் செய்தாலும் கூட அதற்காக இறைவனிடத்தில் மலையளவு நன்மைகளைப் பெறலாம் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். கையளவு முதலீட்டுக்கு மலையளவு லாபம் என்பது உண்மையில் பெரிய விஷயம் தானே!

 عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ – صلى الله عليه وسلم – « مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ – وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلاَّ الطَّيِّبَ – وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّى أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ – அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை – அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்துவிடுவான்.  [புகாரி 1410]

 எழுத்து ஒன்று – நன்மைகள் பத்து..

✍🏻 அன்புள்ளவர்களே!  திருக்குர்ஆனை ஓதும் போது அதில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் வீதம் நமக்குக் கிடைப்பதாக நபிகளார் போதித்துள்ளார்கள். குறைந்த நேரத்தில் அதிகமான நன்மைகளை அறுவடை செய்ய விரும்பும் நபர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பே என்பதில் துளியும் சந்தேகமில்லை

وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ: آلم حَرْفٌ. أَلْفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ ". رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு அதற்காக ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை என்பது அதைப் போன்று பத்து மடங்காகும். அலிஃப், லாம், மீம் ஒரு எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிஃப் ஒரு எழுத்தாகும். லாம் ஒரு எழுத்தாகும். மீம் ஒரு எழுத்தாகும். திர்மிதி (2835)

 குர்ஆனில் மூன்றில் ஒரு பாகம் 

குல்ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112-ஆவது) அத்தியாயத்தை ஓதினால் குர்ஆனில் மூன்றில் ஒரு பங்கை ஓதியதற்கு ஈடானதாகும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.

 عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَجُلاً سَمِعَ رَجُلاً يَقْرَأُ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} يُرَدِّدُهَا فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآن

ஒரு மனிதர் “குல்ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக் கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும் என்று சொன்னார்கள்.  [புகாரி 5013]

 ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ ثُلُثَ الْقُرْآنِ فِي لَيْلَةٍ فَشَقَّ ذَلِكَ عَلَيْهِمْ وَقَالُوا أَيُّنَا يُطِيقُ ذَلِكَ يَا رَسُولَ اللهِ فَقَالَ اللَّهُ الْوَاحِدُ الصَّمَدُ ثُلُثُ الْقُرْآنِ

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா? என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவைகளற்றவன்’ (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும் என்று சொன்னார்கள்.  [புகாரி 5013]

 நாவிற்கு  எளிதான திக்ர்..

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا اللّٰهَ ذِكْرًا كَثِيْرًا ۙ‏ وَّ سَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! அல்குர்ஆன்: 33:41,42 )

 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ ، عَنْ أَبِي زُرْعَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيم

இரண்டு வார்த்தைகள் உண்டு. அவை நாவிற்கு (கூற) எளிதானது, தராசில் (நன்மையால்) கனமானது, இறைவனுக்கு விருப்பமானதும் ஆகும். (அவை) 1) சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி 2) சுப்ஹானல்லாஹில் அளீம்” என்று நபி (ஸல்) கூறினார்கள். [ரியாளுஸ்ஸாலிஹீன்: 1408]

கடல் அளவு பாவமும் கரைந்து விட… 

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ "".

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!’’ [புகாரி 6405]

 சின்ன துஆ இரவு முழுவதும் பாதுகாப்பு 

فَذَكَرَ الْحَدِيثَ فَقَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ، وَلاَ يَقْرَبُكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" صَدَقَكَ وَهْوَ كَذُوبٌ، ذَاكَ شَيْطَانٌ "

நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்கüடம் சொன்ன போது,) ”அவன் பொய்யனாயிருந்தும், உங்கüடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான்தான்” என்று கூறினார்கள்.  [புகாரி 3275)

 மற்றவருக்காகப் பிரார்த்தனை செய்தல்

✍🏻 அன்புள்ளவர்களே!   மற்றவருக்காக நாம் துஆச் செய்தால் அதற்காக அதிக நன்மைகள் கிடைக்கின்றன. எத்தனையோ பேர் நம்மிடம் துஆச் செய்யும்படி சொல்லியிருப்பார்கள். அதை நாம் அலட்சியப்படுத்தாமல் நம்முடைய வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.

حَدَّثَتْنِي أُمُّ الدَّرْدَاءِ، قَالَتْ حَدَّثَنِي سَيِّدِي، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ مَنْ دَعَا لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ ‏”‏ 

ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், “ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்! என்று கூறுகிறார். [முஸ்லிம்-5280]

 பிற முஸ்லிமைப் பார்த்து புன்னகை செய்தல்

✍🏻 அன்புள்ளவர்களே!    வழியில் நாம் சந்திக்கும் ஒரு முஸ்லிமைப் பார்த்து நல்ல எண்ணத்துடன் புன்னகைத்தால் அதற்கும் நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இப்படிப்பட்ட ஓர் அருமையான மார்க்கத்தில் இருக்கும் நாம் அதன் சிறப்பைப் பற்றி தெரியாமல் இருக்கின்றோம்.

عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ

உன்னுடைய சகோதரனுடைய முகத்தைப் பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதி 1956)

ஸலாம் கூறுதல்

✍🏻 அன்புள்ளவர்களே!    இன்று முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு சிலர் ஸலாம் சொல்வதற்கு வெட்கப்படுவதைப் பார்க்கிறோம். ஸலாம் கூறுவதால் அவர்களுடைய அந்தஸ்து கெடுவதைப் போன்று நினைக்கிறார்கள். ஆனால் ஸலாம் கூறுதல் இஸ்லாத்தில் சிறந்த செயல் என்பதை அவர்கள் விளங்கவில்லை.

 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ ‏ "‏ تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ، وَعَلَى مَنْ لَمْ تَعْرِفْ

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள். [புகாரி 12]

 عَنْ أَبِي رَجَاءٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ ‏.‏ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ عَشْرٌ ‏"‏ ‏.‏ ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ عِشْرُونَ ‏"‏ ‏.‏ ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ ثَلاَثُونَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَبِي سَعِيدٍ وَسَهْلِ بْنِ حُنَيْفٍ ‏.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள்.   [திர்மிதீ 2613]

கால்நடைகள் மீது இரக்கம் காட்டுதல்

✍🏻 அன்புள்ளவர்களே!  ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் காட்டும் அன்புக்கு நன்மைகள் கிடைப்பது போன்று, விலங்கினத்தின் மீது இரக்கம் காட்டினால் அதற்கும் நன்மை உண்டு என்று இஸ்லாம் கூறுகின்றது.

கால்நடைகளுக்குச் சூடு வைப்பதையும் போட்டியில் அது தோல்வியடைந்தால் அதைச் சுட்டுக் கொல்வதையும் பார்க்கும் மக்கள், இஸ்லாத்தின் இந்த உன்னதத் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَا رَجُلٌ يَمْشِي فَاشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَنَزَلَ بِئْرًا فَشَرِبَ مِنْهَا، ثُمَّ خَرَجَ فَإِذَا هُوَ بِكَلْبٍ يَلْهَثُ، يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَقَالَ لَقَدْ بَلَغَ هَذَا مِثْلُ الَّذِي بَلَغَ بِي فَمَلأَ خُفَّهُ ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، ثُمَّ رَقِيَ، فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ أَجْرًا قَالَ "" فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ "". تَابَعَهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ وَالرَّبِيعُ بْنُ مُسْلِمٍ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ.

''ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ''எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக்கின்றது போலும்'' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். [ புகாரி 2363, 6009]

 குறைந்த தர்மம் அதிக நன்மை

✍🏻 அன்புள்ளவர்களே!  நம்மில் அதிகமானோர் தர்மம் செய்யும் விஷயத்தைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். அதாவது அதிகமான பொருளைத் தான் தர்மம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல! தூய்மையான சம்பாத்தியத்தில், தூய்மையான எண்ணத்துடன் நம்மால் முடிந்ததை தர்மம் செய்தாலும் அதற்கு இறைவனிடம் கூலி உண்டு. நமக்கு அது அற்பமாகத் தெரிந்தாலும் இறைவனிடம் அது மிகப் பெரியதாக இருக்கும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ ـ وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلاَّ الطَّيِّبَ ـ وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ "

எவர் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் அளவு தர்மம் செய்தாரோ – அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளமாட்டான் – அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு, பிறகு நீங்கள் உங்கள் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவிற்கு வளர்த்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். [புகாரி 1410]

 பாதையில் முட்கிளை ஒதிக்கினால் பாவம் மன்னிக்கப்படும்

✍🏻 அன்புள்ளவர்களே!  பாதையில் பிறருக்கு இடையூறு செய்ய கூடிய பொருட்களை நாம் அகற்றினால் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறான். கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளியை நோக்கி வரும் வழியில் பிறருக்கு இடையூறு தரக் கூடிய பார்த்து விட்டு அதை சரிசெய்யாமல் வந்து விடக் கூடாது. பிறருக்கு இடையூறு தரக்கூடிய பொருட்களை நாம் விளக்குவது மூலமாக நம்முடைய தொழுகை தவறிவிட்டாலும் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறான். இவ்செயல்கள் மிகப்பெரிய விஷயம் கிடையாது. நாம் முள்ளையே அல்லது கல்லையே கடந்து சொல்லும் போது அதை தூக்கி எரிந்து விட வேண்டும்.

ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்(டு அதை எடுத்து அப்புறப்படுத்திவிட்)டார். அ(தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த)து, அவரைத் (தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழவிடாமல்) தாமதப் படுத்திவிட்டது. அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.  புகாரி 652

தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.  : [புகாரி 2989]

 வீட்டில் உளு செய்தால் பாவம் மன்னிக்கப்படும்

✍🏻 அன்புள்ளவர்களே!  இறைநம்பிக்கையாளர் என்று சொல்ல கூடிய அனைவரும் கடமையான தொழுகையை பேணி தொழ வேண்டும், இந்த கடமையான தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வரும் போது வீட்டில் உளு செய்து கொண்டு வந்தால் அச்செயலுக்காக அல்லாஹ் நம்முடைய பாவத்தை மன்னித்து நம்முடைய படித்தரத்தை உயர்த்துகிறான், இந்த அமல் மிகப்பெரிய செயல்கள் கிடையாது, நம்மால் முடியாத விஷயமும் கிடையாது, சாதரணமாக விஷயம் தான், இது போன்ற சாதாரணமான அமலை தான் அல்லாஹ் விரும்புகிறான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" صَلاَةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ، وَصَلاَتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ، لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ، لَمْ يَخْطُ خُطْوَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ خَطِيئَةً، حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ، وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ، وَتُصَلِّي ـ يَعْنِي عَلَيْهِ ـ الْمَلاَئِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ ""

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத்தெருவில் தொழுவதை விடவும் 'ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளி வாசலுக்கு வந்தால் அவர் பள்ளி வாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான். (கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்üவாசலில் இருக்கும்போது அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் (வெüயேறிவிடாமல்) எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்கசுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல் மூலம்) அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்.. அப்போது வானவர்கள், ''இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்றுபிரார்த்திக்கின்றார்கள்.  [புகாரி 477]

நல்ல வார்த்தை தர்மம்மாகும் 

நாம் அழகிய வார்த்தையை பேசினால் அவ்வார்த்தை தர்மமாக அமையும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாட்களும் தருமம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தருமமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.  புகாரி 2989

 நரகத்தி­ருந்து தப்பித்துக்கொள்ளலாம்

✍🏻 அன்புள்ளவர்களே!  நாம் நல்ல வார்த்தை பேசுவதின் மூலமாக நரகம் தடுக்கப்படுகிறது.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.

பிறகும் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போதும் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.

பிறகு, ''பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக்கொள்ளுங்கள்)'' என்றார்கள் புகாரி 6023

 நல்ல வார்த்தையின் மூலமாக சொர்க்கம் செல்வான்

✍🏻 அன்புள்ளவர்களே!  சில நேரங்களில் நாம் நம்மையும் அறியாமலேயே நல்ல அல்லது கெட்ட பேச்சுகளை பேசிவிடுகிறோம். அதன் விளைவு மிகவும் பெரியதாக அமைந்து விடுகிறது என்பதை நாம் யோசிப்பதில்லை. பாதிக்கப்பட்ட ஒர் இறைநம்பிக்கையாளருக்காக வாதாடி அவருக்கேற்பட்ட பாதிப்பை அகற்ற வழி காண்பது, சிரமத்திலுள்ள ஒருவரின் சிரமத்தை அகற்ற பரிந்துரைப்பது, சண்டையிட்டுக்கொள்ளும் இருவரிடையே சமாதானம் ஏற்படுவதற்காகப் பேசுவது, ஆகிய நமக்கு பெரிய சாதனைகளாத் தெரிவதில்லை. ஆனால் இறை திருப்தியை நாடி இவற்றைப் பேசும்போது இறைவன் உயர் அந்தஸ்தை வழங்குகிறான். இதைப் போன்றே ஆட்சியாளரைத் திருப்திபடுத்துவதற்காக அவர் செய்யும் தவறையும் சரி என்று சொல்வது, பிறர் மனம் நோகும் வகையில் பேசுவது, பங்காளிகள் அல்லது நண்பர்களிடையே பகை மூட்டும் வகையில் பேசுவது ஆகிய நமது பார்வைக்கு ஒரு குற்றமாக தெரியவில்லை. ஆனால் இந்த பேச்சுகளின் பின் விளைவு கடுமையானது என்பதால் இவை நரகத்தின் அதலபாதாளத்தில் தள்ளிவிடும். ஆகவே எதைப் பேசினாலும், பேசுவதற்கு முன் அதன் பின் விளைவுகள் குறித்து யோசித்த பிறகே பேச வேண்டும். இதுவே இறைநம்பிக்கையாளரின் பண்பாகும்.

ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக் குரிய ஓரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ் வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.  புகாரி 6478

 தர்மம் செய்தால் நன்மை மலைபோல் உயரும்

✍🏻 அன்புள்ளவர்களே!  யார் முறையான சம்பாத்தி­ருந்து ஒரு ரூபாய் தர்மம் செய்தாலும் ஒரு தாய் தன் குழந்தையை எவ்வளவு பாதுகாப்பாக வளர்ப்பாளோ அதே போன்று அல்லாஹ் நம்முடைய தர்மத்தின் மூலமாக வரக் கூடிய நன்மைகளை பாதுகாத்து வைத்துயிருக்கிறான்.

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்துவிடுவான். புகாரி 1410

 தர்மம் செய்தால் வானவர்கள் பிராத்திப்பார்கள்

தினமும் தர்மம் செய்தால் ஒவ்வொரு நாளையிலும் உலகத்திற்கு வரக்கூடிய இரு மலக்குமார்கள் நமக்காக வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வார்கள்.

'ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ''அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!'' என்று கூறுவார். மற்றொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக்கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுவார்கள்.  புகாரி 1442

 அல்லாஹ்வின் பெயரை மனனம் செய்தால் சுவனம்

✍🏻 அன்புள்ளவர்களே!  அல்லாஹ்வுக்கு (99) பல பெயர்கள் உள்ளன. அந்த பெயர்களை யார் மனனம் செய்கிறார்களோ அந்த மனிதனுக்கு சொர்க்கம் நிச்சயம் என்று அல்லாஹ் கூறுகிறான். பெயரை மனப்பாடம் செய்வதற்கு கஷ்டம் கிடையாது. மனப்பாடம் பன்னுவதற்கு சில முறைகள் உள்ளன. நாம் தினமும் பஸ்ஸில் பயணம் செய்பவராக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு பெயர் என்ற அடிப்படையில் 99 நாளைக்கு 99 பெயர்களை மனனம் செய்யலாம். அப்படியில்லையென்றால் நாம் வேளை செய்யும் போது ஒரு நாளைக்கு ஒரு பெயரை மனனம் செய்யலாம். அல்லாஹ்வின் பெயர்களை மனனம் செய்வதற்கு கஷ்டம் என்று நினைத்தால் நம்முடைய குழந்தைகள் எப்படி பள்ளி பாடத்தை படிப்பார்கள். இன்னும் சில குழந்தைகள் கீழ்தரமான அறுவருப்பான கூத்தாடிகளின் பாடல்களை மனனம் செய்கிறார்கள். இப்படி இருக்கும் போது இலகுவான அல்லாஹ்வின் பெயரை மனனம் செய்வதற்கு கஷ்டப்படுகிறார்கள். இது போன்ற ஈன செயல்களை செய்யாமல் நல்ல அமல்களை செய்ய வேண்டும்.

அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்.  புகாரி 2736

 மலக்குமார்களின் துஆ

✍🏻 அன்புள்ளவர்களே!    நாம் கடமையான தொழுகை முடிந்த பின் அந்த இடத்தி­ருந்து உடனே எழுந்திரிக்காமல் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துயிருந்தால் நம்முடைய பாவங்களை மன்னிக்கும் படி அல்லாஹ்விடம் மலக்குமார்கள் பிராத்தனை செய்வார்கள்.

ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய)சிறு துடக்கு ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் ''இறைவா! இவருக்கு மன்னிப்பüப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக!'' என்று பிரார்த்திக்கிறார்கள். புகாரி 445

 இஸ்லாத்தில் உறுதியாக இருந்து மரணித்தால் சொர்க்கம் செல்வார்

✍🏻 அன்புள்ளவர்களே!    நாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்ட பிறகு எவருக்காக வேண்டியும் நம்முடைய மார்க்கத்தை விட்டு கொடுக்காமல் உறுதியாக இருந்து மரணித்து விட்டால் அந்த மனிதனை அல்லாஹ் செர்க்கத்தில் சேர்த்து விடுகிறான். அவர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு தவறு செய்துயிருந்தாலும் அல்லாஹ் அவரை செர்க்கத்தில் சேர்த்து விடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக்கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, ''லா இலாஹ இல்லல்லாஹ்'' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)'' என்று கூறினார்கள்.  புகாரி 5827

ஏக இறைவனாம் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் ஏகத்துவ கொள்கையில் இறக்கும் ஒருவர் செர்க்கம் புகுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் விபச்சாரம், திருடு போன்ற பாவங்களை அவர் செய்திருந்தால் அவற்றுக்கான தண்டனையை நரகத்தில் அனுபவித்து விட்டு இறுதியாக சொர்க்கம் புகுவார். விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே என்பதற்கு இதுவே கருத்தாகும். அவர் நரகம் புகமாட்டார் என்பதற்கு இத்தகையை குற்றவாளி முஸ்­ம் நிரந்தரமாக நரகத்தில் இருக்க மாட்டார் என்று பொருளாகும். அல்லது அந்த பாவங்களுக்காக அவர் பாவ மன்னிப்புக் கோரி அதனை அல்லாஹ் ஏற்றுக் கொண்டால் நரகத்தில் நுழையாமலேயே சொர்க்கம் செல்லலாம்

தொழுகையில் ஆமீன் கூறினால் பாவம் மன்னிக்கப்படும்

✍🏻 அன்புள்ளவர்களே!     கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக நாம் பள்ளிவாசலுக்கு வருகிறோம். ஜமாஅத்தாக தொழும் போது இமாம் ஃபாத்திஹா சூராவில் கடைசி வசனத்தை (கைரில் மக்லூபி அலைஹிம் வளல்லல்லாழ்ழீன்) ஒதி முடிக்கும் போது பின்னால் இருப்பவர்கள் ஆமீன் என்று கூற வேண்டும். அப்படி அவர் கூறும் போது அவர்களுடைய ஆமினும் மலக்குமார்களுடைய ஆமினும் ஒத்துப்போனால் அல்லாஹ் நம்முடைய முன் செய்த பாவங்களை மன்னிக்கிறான். ஆமீன் என்ற வார்த்தை கடுமையான, பாரதூரமான வாசகம் கிடையாது. நம்முடைய நாவுக்கு ஈசியாக வரக்கூடிய வார்த்தையாகும். இந்த சாதாரமான வாசகத்திற்கு நம்முடைய நல்ல அமல்களை விரும்புகிறான்.

தொழுவிப்பவர் (இமாம்), ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள். ஏனெனில், எவர் ஆமீன் கூறு(ம் நேரமா) வது வாவனவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)து டன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.  புகாரி 780

[தொழுகையில் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று கூறினால் பாவம் மன்னிக்கப்படும்]

✍🏻 அன்புள்ளவர்களே!  கடமையான தொழுகையை நிறைவேற்றும் போது இமாம் ஸமிஅல்லாஹீ ­மன் ஹமிதஹீ என்று கூறும் போது நாம் அதற்கு பகரமாக அல்லாஹீம்ம ரப்பனா லக்கல் ஹம்து கூறும் போது நம்முடைய வார்த்தையும் மலக்குமார்களுடைய வாசகமும் ஒத்துப்போனால் அல்லாஹ் நம்முடைய பாவத்தை மன்னிக்கிறான். இந்த வாசகம் நம்முடைய நாவுக்கு நுழையாத வார்த்தையா என்று பார்த்தால்? கிடையாது. சுலபமான வார்த்தையாக தான் இருக்கிறது. இந்த வார்த்தை கூறுவதின் மூலம் அல்லாஹ் நம்முடைய பாவத்தை மன்னிக்க விரும்புகிறான்.

இமாம் (தொழுகையில்), ''சமிஅல் லாஹு லிமன் ஹமிதஹு லி தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவிமடுத்தான்'' என்று கூறும் போது நீங்கள் ''அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்துலி இறைவா, எங்கள் இரட்சகனே! உனக்கே புகழ் அனைத்தும் உரியது'' என்று கூறுங்கள். ஏனெனில், (இறைவனைத் துதிக்கும்) வானவர்கüன் (துதிச்) சொல்லுடன் எவரது சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகின்றதோ அவர், அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.  புகாரி 3228

சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கபட  கடமையான தொழுகை:

✍🏻 அன்புள்ளவர்களே!  கடமையான தொழுகைக்கான நேரம் வந்ததும் யார் முறையாக உழு செய்து உள்ளச்சத்துடன் ஒழுங்காகத் தொழுகின்றாரோ அவருடைய அத்தொழுகை – அவர் பெரும்பாவங்கள் செய்யாதவரை – அவருடைய சிறிய பாவங்கள் அனைத்திற்கும் பரிகாரமாகிவிடும். அந்நிலை அவருடைய ஆயுள் முழுவதும் உண்டு. (முஸ்லிம்)

 அதிக நன்மைகளையும் பாவங்களையும் போக்கும் ஜுமுஆத் தொழுகை!

   عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً فَإِذَا خَرَجَ الْإِمَامُ حَضَرَتْ الْمَلَائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பெருந்துடக்கிற்காகக் குளிப்பது போன்று ஜுமுஆவுடைய நாளில் குளித்துவிட்டுப் பள்ளிக்குச் செல்பவர் ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து உபதேசத்தைச் செவியேற்கிறார்கள். புகாரி 881

பாவம் போக்கும் ஐவேளைத் தொழுகை: 

✍🏻 அன்புள்ளவர்களே!   “உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி) 

 ஈடு இணை ஏதுமில்லை

✍🏻 அன்புள்ளவர்களே!     நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட(செல்வர்)ர்களையும் நீங்கள் பிடித்து விடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர. (அந்தக் காரியமாவது:)

நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்’’ என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர் ‘‘சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும்’’ என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி(ச் சென்று இதுபற்றி வினவி)னேன்.

நபியவர்கள், “சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹு மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவை கூறியதாக அமையும்’’ என்று பதிலளித்தார்கள். புகாரி 843, முஸ்லிம் 5222

மேற்கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் கூறித் துதிப்பதன் மூலம் நாம் ஏகப்பட்ட நன்மைகளைக் கொள்ளையடித்துவிட முடியும். நாமோ இதை உணராமல் தஸ்பீஹ் செய்வது எல்லாம் முதியவர்களுக்கு மட்டுமே உரிய அமலைப் போன்று ஓரம் கட்டி வைத்து விட்டோம்.

உண்மையில் நன்மை செய்வதாயினும், தீமை செய்வதாயினும் அதற்கு ஏற்ற பருவம் இளமைப் பருவமே! கிடைக்கின்ற நேரங்களை எல்லாம் வீண் பேச்சிலும் வெட்டி அரட்டையிலும் ஈடுபட்டுக் கழிக்கின்ற நாம் நன்மை செய்யும் வாய்ப்பை இழந்து விடுகின்றோம். தீமைகளை அதிகமாகச் சேமிக்கின்றோம்.

இறைவனின் நினைவு நமது உள்ளத்தில் குடி கொண்டு விட்டால் தீமைகள் கட்டுக்குள் வந்துவிடும். நாம் அற்பமாகக் கருதும் திக்ர் என்ற இந்த அமல் அதற்குச் சிறந்த வழியாகும்.நன்மைகளின் மூலம் தீமைகளை அழிக்க முடியும் என்றே திருக்குர்ஆனும் கூறுகின்றது.

நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம். (அல்குர்ஆன்:23:96)

இது போன்ற சின்னச் சின்னச் செயல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து, இறைவனிடத்தில் அதிக நன்மைகளை பெறும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

நற்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்

✍🏻 அன்புள்ளவர்களே!   நற்செயல் புரிய வேண்டுமென்ற சிந்தனை மனதில் தோன்றியதுமே தாமதிக்காமல் செய்து முடித்திட முனைந்திட வேண்டும் தாமதித்தால் அதைத் தடுத்து நிறுத்தி விடுவதற்காக ஷைத்தான் மனதில் பல விதமான ஊசலாட்டத்தை விதைத்திடுவான் காரணம் நற்செயல் புரிவதால் நன்மை எழுதப்பட்டு பாவம் குறைக்கப்பட்டு அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வார்கள் அதனால் நரகம் வெறிச்சோடிக் கிடக்கும் என்பதால் பாவம் குறைக்கப் படாமல் இருப்பதற்காக நற்செயலின் வாசலை ஷைத்தான் பூட்டி விடுவான். ஒருவர் தொழாதவராக இருப்பார் தொழாமல் இருப்பது சரியல்ல தொழ வேண்டும் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அதற்கடுத்த நேரத் தொழுகைக்கான அழைப்பொலியை எதிர்பார்த்து பள்ளிக்கு விரைந்திட வேண்டும். தொழக் கூடியவராக இருப்பார் ஆனால் வைகறைத் (ஃபஜ்ரு) தொழுகையை தொழாதவராக இருப்பார் மற்ற நேரத் தொழுகைகளை தொழுது கொண்டு ஃபஜ்ரை தொழாமல் இருப்பது சரியல்ல நாளை முதல் அதையும் தொழுவதற்கு தொடங்கிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அலாரத்தை வைத்துக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்து தொழுதிட வேண்டும். இன்னாருக்கு இன்னத் தேவைக்காக இவ்வளவு கொடுத்து உதவிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே தாமதிக்காமல் கொடுத்து உதவிட வேண்டும்.

🏻🏻நன்றியுரை:-  تقبل الله منا ومنكم صالح الأعمال نسأل الله أن ييسر لنا أمورنا  ويشرح صدورنا

 “‏ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461.

எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!! ஆமீன்.. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

இக்குறிப்புரை வெளி வர உதவி செய்த‌  அனைவருக்கும், நம் இணையத்தில் வந்து பயனும், பலனும் அடைந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹு கைரா.

" ஆக‌ சிறுக நேரத்தில் பெரு நன்மைகளைச் சம்பாதிக்கும்  பாக்கியத்தை    பெற்று  வாழ வல்ல நாயகன் அருள்புரிவானாக! ஆமீன்.… "

✍ இன்னும் சொல்ல வேண்டியது அதிகமாக உள்ளது நேரத்தின் நலனை கருதி முடித்துக் கொள்கிறேன்  வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ர‌ப்பில் ஆலமீன்…… 

வஸ்ஸலாம் 

இக்குறிப்புரையின் தலைமையாசிரியர் & இக்குழு கண்காணிப்பாளர்:-

உங்களின் துஆக்களை பெற பேராசைப்படும்:-11

உஸ்தாதுனா எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா. வாசுதேவநல்லூரி. செல் 7402127136 & ٩٩٤٢٤٠٧٣٥٨ நான்  விவசாயி..

மெளலானா ஹாபிழ் களந்தை.B. அபு அஜ்மல் புகாரி யூசுபிஉதவியாசிரியர்:-

உஸ்தாதுனா மெளலானா ஹாபிழ் களந்தை B. அபு அஜ்மல் புகாரி யூசுபி. செல் 8754089943. 

ஜுமுஆ பேருரையின் பயன்பாற்றிற்காக மட்டுமே இக்குறிப்புரை தரப்படுகின்றன, இவற்றை  அனுமதி இல்லாமல் மறு பிரசுரம் செய்யலாகாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானது.

உங்களுக்கு பிடித்த தலைப்பில் PDF வடிவில் பயான் குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய..

https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4

********** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين ************

சிறு நேரத்தில் பெரு நன்மைகளைச் சம்பாதிப்போம1pdf

http://www.smhowsee.blogspot.in/

ஜஜாக்கல்லஹு கைரா. - அல்ஹம்துலில்லாஹ்

நன்றி மீண்டும் வருக எனக்கு துஆ செயுங்கள்

அஸ்ஸலாமுஅலைக்கும்வரஹ்மதுல்லாஹிவபரகாதுஹு.