📚 أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 📚
🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹 🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ الله ﷺ 🌹
♣ மார்ச் – 2022 –25 – ந் தேதி ஹிஜ்ரி–1443 – [شعبان] ஷஃபான் மாதம் –21–ம் தேதி மூன்றாம் வார ஜுமுஆ பேருரையின் குறிப்புரை வெளியீட்டு எண்: 179 [டிஜிடல் முறை - 23] ♣

بسم الله، والحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز; {اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ۖ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ۞ ۖ} -[سورة النور - سورة24 - عدد آياتها 15 ] - صدق الله العظيم / ورَحِم الله محمدَ بن المنكدر الذي عندما حَضَرَتْه الوفاةُ بَكَى، فقِيل له ما يُبكيك؟ فقال: واللهِ ما أبْكِي ذَنباً أذنبْتُه، لكنَّني أخشى أنْ أكونَ أتيتُ شيئاً حَسِبْتُه هَيناً وهو عند الله عظيم..(إحياء علوم الدين: الغزالي، 6/116) »
[தலைப்பின் விளக்கம் : ‘சிறு நேரத்தில் பெரு நன்மைகளைச் சம்பாதிப்போம்!!” சின்ன. சின்ன பொடி கற்கள்தான் மலையாகிறது என்பது போல: சின்ன. சின்ன அமல்கள்தான் சுவர்கத்தில் மிகப்பெரிய மலையாக காட்சியளிக்கும். எந்த ஒரு நன்மையையும் சாதாரணமாக கருதி / அசால்டாக விட வேண்டாம். இன்னும் நமக்கு அதிக நன்மை தேவைப்படுகிறது சம்பந்தமாக ஜுமுஆ குறிப்புரை.]
【♣ துவக்கவுரை: [المقد مة] INTRODUCTION ♣】
✍🏻 அன்புள்ளவர்களே! அல்லாஹ்வின் ﷻ பேரருளால் [شعبان] ஷஃபான் மாதத்தின் மூன்றாம் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ் ..
✍🏻 அன்புள்ளவர்களே! நாமெல்லாம் ரமலானுக்கு தயாராகி கொண்டிருக்கிறோம். இந்த ரமலானில் நாம் அதிக நன்மைகளைப் பெற சில இலகுவான சின்ன சின்ன அமல்கள் இருக்கின்றன அவைகளை செய்தால் நமது பட்டோலைகளை ஈசியாக கணக்கச் செய்து விடலாம். [உதாரணமாக: பரிட்சையில் வரும் 1 மார்க் கொஸ்டின் போல ] அவைகளை நாம் தெரிந்து கொண்டு வரக்கூடிய ரமலானில் போட்டி போட்டு அமல் செய்வோமாக!
✍🏻 அன்புள்ளவர்களே! சமீப காலமாக இஸ்லாமிய சமூக மக்களிடையே சிறிய பாவமாகத்தானே இருக்கிறது, சிறிய / எளிய அமலாகத்தானே இருக்கிறது என்று துச்சமாகக் கருதுகிற மனோ நிலை காணப்படுகிறது . இதுதான் இந்த விபரீத போக்கிற்கு அடிப்படை காரணம் ஆகும்.
எந்த ஒரு சின்ன நன்மையான செயல் நம்மை சுவனத்திற்கு அழைத்துச் செல்லும், எந்த ஒரு சின்ன பாவமான செயல் நம்மை நரகின் பாதாளத்திற்கு அழைத்துச் என எவருக்கும் தெரியாது.
நன்மையோ, பாவமோ அதன் அளவைக் கொண்டு குறைவாக மதிப்பிடுகிற விபரீதப் போக்கு நம் ஈமானையும், ஈமானிய அடிப்படையிலான வாழ்வையும் ஆட்டிப்பார்க்கிற ஆற்றலும், வலிமையும் கொண்டது என்பதை முதலில் நாம் உணர்ந்தாக வேண்டும், ஆக தேனி போல சிறுக சிறுக நன்மைகளை சேர்த்து மறுமையில் அதிக நற்போருகளை பெறுவோமாக? ஆமீன் ✍என துஆச் செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்….
【பார்பதற்க்கு சின்ன சின்ன அமல்கள் ஆனால் கிடைப்பது பெறும் பெறும் வெகுமதிகள்】 :-
【சிறு நேரத்தில் பெரு நன்மைகளை சம்பாதிப்போம்.】
✍🏻 அன்புள்ளவர்களே! நாம் நற்செயல்களை போட்டி போட்டு செய்வதன் மூலம்தான் சுவனத்திற்குள் இலகுவாக நுழைய முடியும் ஆக பல்வேறு சின்னஞ்சிறு அமல்களில் பென்னம் பெரும் நன்மைகளை இஸ்லாம் வைத்துள்ளது.
மனிதர்களில் பெரும்பான்மையினர் எல்லா செயல்களும் விரைவாக அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். எவ்வளவு பெரிய வேலையும் சொற்ப நேரத்தில், இலகுவாக முடிந்து விடுவதையே அதிகமானோர் விரும்புகின்றனர்.
அதனாலேயே சமையல் வேலையை எளிதாக்கித் தரும் மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டுப் பொருள்களுக்கும், பயண நேரத்தை மிச்சப்படுத்தும் பைக், இரயில் போன்றவை உள்ளிட்ட அனைத்து நவீன சாதகங்களுக்கும் மக்களுக்கு மத்தியில் தனிமவுசு இருப்பதைக் காண முடிகிறது.
முப்பதே நாட்களில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் எனும் தலைப்பிலான புத்தகங்கள் அதிகம் விற்பனையாவதும், ஒரு நிமிடத்தில் பாஸ்போர்ட் போட்டா என்று விளம்பரம் செய்யப்படும் கடைக்குத் தனியாக மக்கள் கூட்டம் மொய்ப்பதும் சீக்கிரத்தில் அதிக பலன் கிடைக்க வேண்டும் என்ற பெரும்பான்மை மக்களின் மன நிலையைக் கண்ணாடியாய் பிரதிபலிக்கின்றது.
மக்களின் இந்த மனநிலையைப் பறைசாற்றும் அடையாளங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் என்றாலும் விஷயம் அதுவல்ல. இவ்வாறாக எல்லாவற்றிலும் சொற்ப நேரத்தில் அதிக பலன் கிடைக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு இறைவனிடத்தில் நன்மைகளைப் பெறுவதற்கு இதுமாதிரியான வழிமுறைகள் உண்டா? என்று கேட்டால் ஆம் என்பது தான் அதற்குச் சரியான பதிலாகும்.
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا ۚ وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ
ஒரு நன்மைக்குப் பத்து கூலிகள் தருவதை (அல்குர்ஆன் 6:160) வழக்கமாக வைத்திருக்கும் இறைவனிடம் இது போன்ற சலுகைகள் இல்லாமலிருக்குமா?
நபிகள் நாயகம் கற்றுத் தந்த நல்லறங்களிலும் சொற்ப நேரத்தில் அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும்படியான ஏராளமான வழிபாடுகளை அறிய முடிகிறது. அவ்வகையிலான சில நன்மைகளை நாம் தெரிந்து கொள்வோமா?.
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈
♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى ♣
✍🏻 அன்புள்ளவர்களே! நாம் ஒரு அமலை சின்ன அமல்தானே என்று சாதாரணமாக நினைக்கிறோம் ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கிறது.
اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ۖ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْم
இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.. (அல்குர்ஆன்: 24: 15 )
♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم ♣
ورَحِم الله محمدَ بن المنكدر الذي عندما حَضَرَتْه الوفاةُ بَكَى، فقِيل له ما يُبكيك؟ فقال: واللهِ ما أبْكِي ذَنباً أذنبْتُه، لكنَّني أخشى أنْ أكونَ أتيتُ شيئاً حَسِبْتُه هَيناً وهو عند الله عظيم..(إحياء علوم الدين: الغزالي، 6/116)
முஹம்மது இப்னு முன்கதிர் (ரலி அவர்கள் மரணதருவாயில் இருக்கும் போது அழுதார்கள் ஏன் அழுகிறீர் என்று வினவிய போது அவர்கள் நான் செய்த பாவத்தை நினைத்து அழவில்லை .மாறாக இறைவனிடத்தில் பெரியதாக இருக்கும் விஷயத்தை நான் லேசாக கருத்திருப்பேனோ என்ற பயத்தினால் அழுகிறேன் என்று பதிலுரைத்தார்கள் ...
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طليق»
நல்லதை எதையுமே குறைத்து மதிப்பிடாதீர்கள்..
عن أنس عن رسولِ اللَّهِ ﷺ قَالَ: يتْبعُ الميْتَ ثلاثَةٌ: أهلُهُ ومالُه وعمَلُه، فيرْجِع اثنانِ ويبْقَى واحِدٌ: يرجعُ أهلُهُ ومالُهُ، ويبقَى عملُهُ متفقٌ عَلَيهِ
“இறந்தவரை முன்று காரியங்கள் பின் தொடர்ந்து செல்கின்றன, அவற்றில் இரண்டு திரும்பிவிடும், ஒன்று மட்டும் மைய்யித்துடன் தங்கிவிடும், அவனுடைய உறவினர், அவனுடைய செல்வம், அவனுடைய செயல்கள். அவனுடைய உறவினரும், செல்வமும் திரும்பிவிடுவர், பிறகு அவனுடைய நல்லமல் மட்டும் அவனுடனே தங்கிவிடுகிறது’’ (முஸ்லிம்)
عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَحَبُّ الأَعْمَالِ إِلَى اللَّهِ تَعَالَى أَدْوَمُهَا وَإِنْ قَلَّ قَالَ وَكَانَتْ عَائِشَةُ إِذَا عَمِلَتِ الْعَمَلَ لَزِمَتْهُ
“நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். அது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் சரியே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [முஸ்லிம் 1436]
، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" سَدِّدُوا وَقَارِبُوا، وَاعْلَمُوا أَنْ لَنْ يُدْخِلَ أَحَدَكُمْ عَمَلُهُ الْجَنَّةَ، وَأَنَّ أَحَبَّ الأَعْمَالِ أَدْوَمُهَا إِلَى اللَّهِ، وَإِنْ قَلَّ ""
நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீகள்.) அறிந்துகொள்ளுங்கள்: உங்கள் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோருக்கு அழகிய கூலி உண்டு. நமது கட்டளைகளில் எளிதானதை அசொர்க்கம் புக முடியும்.) நற்செயல்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். [புகாரி 6464]
அல்லாஹ் ﷻ ஒருவனுக்கு நலவை நாடினால் :
عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا اسْتَعْمَلَهُ " . فَقِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ " يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ "(11625)
அல்லாஹ் ﷻ ஒரு அடியானுக்கு நல்லவை நாடினால் நற்கருமங்கள் செய்வதிலே அவனை ஈடுபடுத்துவான். [திர்மிதி 2142]
【சிறிய அமலாக இருப்பினும் அது வீண்போகாது】:-
✍🏻 அன்புள்ளவர்களே! பள்ளியில் ரிஸல்ட் வெளியான நேரம் 1 மார்க்குள, இரண்டு மார்க்கல போயிடுச்சே என கை சேதப்பட்டு பிரயோஜனம் கிடையாது. உனக்கு தேர்வுக்கு முன்னால் உள்ள நேரத்தை முறையாக பயன்படுத்தி படித்திருந்தால் புலம்ப வேலையில்லை.
தேர்தலுக்கு முன் உள்ள பிரச்சாரக்காலம், போட்டியின் களம், பரிட்சைக்கு முன் உள்ள நேரத்தை முறையாக பயன்படுத்தாதவர்கள் பின்னால் படுகிற கைசேதத்தை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இவைகள் எல்லாம் அல்லாஹ்வின் ஏற்பாடுதான் போலும், சங்கையானவர்களே!
எதிர்கால வாழ்வில் வளத்தை விரும்பும் ஒவ்வொருவருமே தனது அன்றாட தேவைகளுக்கு மட்டும் உழைக்காமல் அலுவல் நேரத்துக்கும் அப்பால் பார்ட் டைம், சைடு பிசினஸ் என்று பல வழிகளில் உழைத்து வருமானத்தைப் பெருக்கி சேமித்து வைக்கிறார்கள். அவ்வாறே மறுமை வாழ்வு வளமாக இருக்க வேண்டுமென்று விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் கடமையான அமல்களைச் செய்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் நபி (ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்ட உபரியான வணக்கங்களையும் அதிகமாகச் செய்து வரவேண்டும். எனவே தான் அல்லாஹ்வும் (நபிலான) உபரியான வணக்கங்களைச் செய்வதற்கு அதிகம் ஆர்வமூட்டுகிறான்.
وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ؕ
(மரணத்திற்கு முன்னதாக) உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முற்கூட்டி அனுப்பி வைப்பீர்களோ, அதனை அல்லாஹ்விடம் மறுமையில் பெற்றுக் கொள்வீர்கள். (2:110)
உபரியான வணக்கங்களை நபில் தானே என்று அலட்சியப்படுத்தி விடக்கூடாது. ஏனெனில் சிறிய அமலாக இருப்பினும் அது வீண்போகாது என்பது குர்ஆனின் கூற்றாகும்.
فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். 99:7
وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். 99:8
எவர் ஒரு அணுவளவு நன்மை செய்தாலும் அவர் (அங்கு) அதனைக் காண்பார். (99:7) மற்றொரு இடத்தில் அல்லாஹ் இப்படிக் கூறுகிறான். எவர் முஃமினாக இருக்கும் நிலையில் நற்செயல்கள், செய்கின்றாரோ அவரின் முயற்சி (எவ்விதத்திலும்) நிராகரிக்கப்பட மாட்டாது. நிச்சயமாக நாம் அவைகளைப் பதிவு செய்து வருகிறோம். (21:94)
【முதல் தகுதி (மனத்தூய்மை)】
✍🏻 அன்புள்ளவர்களே! குறைந்த நேரத்தில் அதிகமான நன்மைகளைப் பெற வேண்டும் என்று ஆசை கொள்வதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன் முக்கியமாக நம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதுதான் மனத்தூய்மை.
செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்காக என்ற மனத்தூய்மையுடன் செய்யும் போதே அல்லாஹ்விடம் அதற்குரிய கூலியைப் பெற முடியும் என்பதை எப்போதும் மறந்து விடக் கூடாது.
وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِؕ قَالَ لَاَقْتُلَـنَّكَؕ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. “நான் உன்னைக் கொல்வேன்” என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். “(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்” என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார். (அல்குர்ஆன் 5:27)
" إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: [புகாரி 1]
எனவே சரியான இறைநம்பிக்கையுடனும், மனத்தூய்மையுடனும் இந்நன்மைகளைப் புரிந்தால் அல்லாஹ்விடம் அதிக நன்மைகளைப் பெற்றிடலாம் என்பதில் சந்தேகமே இல்லை. அவற்றை இனி காண்போம்.:-
【 சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட…】
✍🏻 அன்புள்ளவர்களே! உளூச் செய்த நிலையில் பாங்கிற்குப் பிறகு அஷ்ஹது அன் லாயிலாஹ என்று துவங்கும் துஆவை ஓதினால் சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படும் என்று நபிகள் நாயகம் சொல்கிறார்கள்.
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ كَانَتْ عَلَيْنَا رِعَايَةُ الإِبِلِ فَجَاءَتْ نَوْبَتِي فَرَوَّحْتُهَا بِعَشِيٍّ فَأَدْرَكْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمًا يُحَدِّثُ النَّاسَ فَأَدْرَكْتُ مِنْ قَوْلِهِ " مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ مُقْبِلٌ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ إِلاَّ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ " . قَالَ فَقُلْتُ مَا أَجْوَدَ هَذِهِ . فَإِذَا قَائِلٌ بَيْنَ يَدَىَّ يَقُولُ الَّتِي قَبْلَهَا أَجْوَدُ . فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ قَالَ إِنِّي قَدْ رَأَيْتُكَ جِئْتَ آنِفًا قَالَ " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ - أَوْ فَيُسْبِغُ - الْوُضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ إِلاَّ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ " .
நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்து வந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள், “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை” என்று கூறுவதை நான் கேட்டேன்.
உடனே நான் “என்ன அருமையான வார்த்தை!” என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் “இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது” என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்:
உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம். [முஸ்லிம் 397]
சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படுவது விலை மதிக்க இயலாத நன்மை என்பதும், அதற்குரிய வழிமுறையாகச் சொல்லப்பட்டது மிக எளிமையானது என்பதும் சொல்லிப் புரிய வேண்டியதில்லை.
【 ஒரு நாளுக்கு ஆயிரம் நன்மைகள் ..】
✍🏻 அன்புள்ளவர்களே! நாளொன்றுக்கு ஆயிரம் நன்மைகளை அள்ளித் தரும் மிக எளிதான வழிபாட்டை நபிகள் நாயகம் பின்வரும் நபிமொழியில் கற்றுத்தருகிறார்கள். அதை உளமாறப் படித்து அது எவ்வளவு எளிதானது என்பதை நீங்கள் உணரும் போது சுப்ஹானல்லாஹ் என்று கூறத் தயங்க மாட்டீர்கள்.
وَقَالَ صلى الله عليه وسلم: أَيَعْجِزُ أَحَدُكُم أَنْ يَكْسِبَ كُلَّ يَوْمٍ أَلْفَ حَسَنَةٍ؟ فَسَأَلَهُ سَائِلٌ مِنْ جُلَسَائِهِ كَيْفَ يَكْسِبُ أَحَدُنَا أَلْفَ حَسَنَةٍ؟ قَالَ: يُسَبِّحُ مِائَةَ تَسْبِيحَةٍ، فَيُكتَبُ لَهُ أَلْفُ حَسَنَةٍ أَوْ يُحَطُّ عَنْهُ أَلْفُ خَطِيئَةٍ.
நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், “உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?” என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், “எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?” என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை (“சுப்ஹானல்லாஹ்’ என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன” என்று சொன்னார்கள். [முஸ்லிம் 5230]
【 கையளவு தர்மம் – மலையளவு கூலி…】
✍🏻 அன்புள்ளவர்களே! தூய்மையான சம்பாத்தியத்தில் மதிப்பில் குறைந்த பொருளை சிறிய அளவு தர்மம் செய்தாலும் கூட அதற்காக இறைவனிடத்தில் மலையளவு நன்மைகளைப் பெறலாம் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். கையளவு முதலீட்டுக்கு மலையளவு லாபம் என்பது உண்மையில் பெரிய விஷயம் தானே!
عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ – صلى الله عليه وسلم – « مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ – وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلاَّ الطَّيِّبَ – وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّى أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ – அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை – அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்துவிடுவான். [புகாரி 1410]
【 எழுத்து ஒன்று – நன்மைகள் பத்து..】
✍🏻 அன்புள்ளவர்களே! திருக்குர்ஆனை ஓதும் போது அதில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் வீதம் நமக்குக் கிடைப்பதாக நபிகளார் போதித்துள்ளார்கள். குறைந்த நேரத்தில் அதிகமான நன்மைகளை அறுவடை செய்ய விரும்பும் நபர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பே என்பதில் துளியும் சந்தேகமில்லை
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ: آلم حَرْفٌ. أَلْفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ ". رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு அதற்காக ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை என்பது அதைப் போன்று பத்து மடங்காகும். அலிஃப், லாம், மீம் ஒரு எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிஃப் ஒரு எழுத்தாகும். லாம் ஒரு எழுத்தாகும். மீம் ஒரு எழுத்தாகும். திர்மிதி (2835)
【 குர்ஆனில் மூன்றில் ஒரு பாகம் 】
“குல்ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112-ஆவது) அத்தியாயத்தை ஓதினால் குர்ஆனில் மூன்றில் ஒரு பங்கை ஓதியதற்கு ஈடானதாகும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَجُلاً سَمِعَ رَجُلاً يَقْرَأُ {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} يُرَدِّدُهَا فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآن
ஒரு மனிதர் “குல்ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக் கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும் என்று சொன்னார்கள். [புகாரி 5013]
، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ ثُلُثَ الْقُرْآنِ فِي لَيْلَةٍ فَشَقَّ ذَلِكَ عَلَيْهِمْ وَقَالُوا أَيُّنَا يُطِيقُ ذَلِكَ يَا رَسُولَ اللهِ فَقَالَ اللَّهُ الْوَاحِدُ الصَّمَدُ ثُلُثُ الْقُرْآنِ
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா? என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவைகளற்றவன்’ (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும் என்று சொன்னார்கள். [புகாரி 5013]
【 நாவிற்கு எளிதான திக்ர்..】
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا اللّٰهَ ذِكْرًا كَثِيْرًا ۙ وَّ سَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்! அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்! ( அல்குர்ஆன்: 33:41,42 )
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ ، عَنْ أَبِي زُرْعَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيم
”இரண்டு வார்த்தைகள் உண்டு. அவை நாவிற்கு (கூற) எளிதானது, தராசில் (நன்மையால்) கனமானது, இறைவனுக்கு விருப்பமானதும் ஆகும். (அவை) 1) சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி 2) சுப்ஹானல்லாஹில் அளீம்” என்று நபி (ஸல்) கூறினார்கள். [ரியாளுஸ்ஸாலிஹீன்: 1408]
【கடல் அளவு பாவமும் கரைந்து விட… 】
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ "".
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!’’ [புகாரி 6405]
【சின்ன துஆ இரவு முழுவதும் பாதுகாப்பு 】
فَذَكَرَ الْحَدِيثَ فَقَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ، وَلاَ يَقْرَبُكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" صَدَقَكَ وَهْوَ كَذُوبٌ، ذَاكَ شَيْطَانٌ "
நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்கüடம் சொன்ன போது,) ”அவன் பொய்யனாயிருந்தும், உங்கüடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான்தான்” என்று கூறினார்கள். [புகாரி 3275)
【மற்றவருக்காகப் பிரார்த்தனை செய்தல்】
✍🏻 அன்புள்ளவர்களே! மற்றவருக்காக நாம் துஆச் செய்தால் அதற்காக அதிக நன்மைகள் கிடைக்கின்றன. எத்தனையோ பேர் நம்மிடம் துஆச் செய்யும்படி சொல்லியிருப்பார்கள். அதை நாம் அலட்சியப்படுத்தாமல் நம்முடைய வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.
حَدَّثَتْنِي أُمُّ الدَّرْدَاءِ، قَالَتْ حَدَّثَنِي سَيِّدِي، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ “ مَنْ دَعَا لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ ”
ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், “ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!” என்று கூறுகிறார். [முஸ்லிம்-5280]
【பிற முஸ்லிமைப் பார்த்து புன்னகை செய்தல்】
✍🏻 அன்புள்ளவர்களே! வழியில் நாம் சந்திக்கும் ஒரு முஸ்லிமைப் பார்த்து நல்ல எண்ணத்துடன் புன்னகைத்தால் அதற்கும் நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இப்படிப்பட்ட ஓர் அருமையான மார்க்கத்தில் இருக்கும் நாம் அதன் சிறப்பைப் பற்றி தெரியாமல் இருக்கின்றோம்.
عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ
உன்னுடைய சகோதரனுடைய முகத்தைப் பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதி 1956)
【ஸலாம் கூறுதல்】
✍🏻 அன்புள்ளவர்களே! இன்று முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு சிலர் ஸலாம் சொல்வதற்கு வெட்கப்படுவதைப் பார்க்கிறோம். ஸலாம் கூறுவதால் அவர்களுடைய அந்தஸ்து கெடுவதைப் போன்று நினைக்கிறார்கள். ஆனால் ஸலாம் கூறுதல் இஸ்லாத்தில் சிறந்த செயல் என்பதை அவர்கள் விளங்கவில்லை.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ " تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ، وَعَلَى مَنْ لَمْ تَعْرِفْ
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள். [புகாரி 12]
عَنْ أَبِي رَجَاءٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ . قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " عَشْرٌ " . ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " عِشْرُونَ " . ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " ثَلاَثُونَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَأَبِي سَعِيدٍ وَسَهْلِ بْنِ حُنَيْفٍ .
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். [திர்மிதீ 2613]
【கால்நடைகள் மீது இரக்கம் காட்டுதல்】
✍🏻 அன்புள்ளவர்களே! ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் காட்டும் அன்புக்கு நன்மைகள் கிடைப்பது போன்று, விலங்கினத்தின் மீது இரக்கம் காட்டினால் அதற்கும் நன்மை உண்டு என்று இஸ்லாம் கூறுகின்றது.
கால்நடைகளுக்குச் சூடு வைப்பதையும் போட்டியில் அது தோல்வியடைந்தால் அதைச் சுட்டுக் கொல்வதையும் பார்க்கும் மக்கள், இஸ்லாத்தின் இந்த உன்னதத் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" بَيْنَا رَجُلٌ يَمْشِي فَاشْتَدَّ عَلَيْهِ الْعَطَشُ، فَنَزَلَ بِئْرًا فَشَرِبَ مِنْهَا، ثُمَّ خَرَجَ فَإِذَا هُوَ بِكَلْبٍ يَلْهَثُ، يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ، فَقَالَ لَقَدْ بَلَغَ هَذَا مِثْلُ الَّذِي بَلَغَ بِي فَمَلأَ خُفَّهُ ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ، ثُمَّ رَقِيَ، فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ، فَغَفَرَ لَهُ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّ لَنَا فِي الْبَهَائِمِ أَجْرًا قَالَ "" فِي كُلِّ كَبِدٍ رَطْبَةٍ أَجْرٌ "". تَابَعَهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ وَالرَّبِيعُ بْنُ مُسْلِمٍ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ.
''ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ''எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக்கின்றது போலும்'' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். [ புகாரி 2363, 6009]
【குறைந்த தர்மம் அதிக நன்மை】
✍🏻 அன்புள்ளவர்களே! நம்மில் அதிகமானோர் தர்மம் செய்யும் விஷயத்தைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். அதாவது அதிகமான பொருளைத் தான் தர்மம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல! தூய்மையான சம்பாத்தியத்தில், தூய்மையான எண்ணத்துடன் நம்மால் முடிந்ததை தர்மம் செய்தாலும் அதற்கு இறைவனிடம் கூலி உண்டு. நமக்கு அது அற்பமாகத் தெரிந்தாலும் இறைவனிடம் அது மிகப் பெரியதாக இருக்கும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ ـ وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلاَّ الطَّيِّبَ ـ وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ "
எவர் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் அளவு தர்மம் செய்தாரோ – அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளமாட்டான் – அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு, பிறகு நீங்கள் உங்கள் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவிற்கு வளர்த்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். [புகாரி 1410]
【பாதையில் முட்கிளை ஒதிக்கினால் பாவம் மன்னிக்கப்படும்】
✍🏻 அன்புள்ளவர்களே! பாதையில் பிறருக்கு இடையூறு செய்ய கூடிய பொருட்களை நாம் அகற்றினால் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறான். கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளியை நோக்கி வரும் வழியில் பிறருக்கு இடையூறு தரக் கூடிய பார்த்து விட்டு அதை சரிசெய்யாமல் வந்து விடக் கூடாது. பிறருக்கு இடையூறு தரக்கூடிய பொருட்களை நாம் விளக்குவது மூலமாக நம்முடைய தொழுகை தவறிவிட்டாலும் அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறான். இவ்செயல்கள் மிகப்பெரிய விஷயம் கிடையாது. நாம் முள்ளையே அல்லது கல்லையே கடந்து சொல்லும் போது அதை தூக்கி எரிந்து விட வேண்டும்.
ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்(டு அதை எடுத்து அப்புறப்படுத்திவிட்)டார். அ(தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த)து, அவரைத் (தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழவிடாமல்) தாமதப் படுத்திவிட்டது. அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கலிருந்து) மன்னிப்பு வழங்கினான். புகாரி 652
தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும். : [புகாரி 2989]
【வீட்டில் உளு செய்தால் பாவம் மன்னிக்கப்படும்】
✍🏻 அன்புள்ளவர்களே! இறைநம்பிக்கையாளர் என்று சொல்ல கூடிய அனைவரும் கடமையான தொழுகையை பேணி தொழ வேண்டும், இந்த கடமையான தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வரும் போது வீட்டில் உளு செய்து கொண்டு வந்தால் அச்செயலுக்காக அல்லாஹ் நம்முடைய பாவத்தை மன்னித்து நம்முடைய படித்தரத்தை உயர்த்துகிறான், இந்த அமல் மிகப்பெரிய செயல்கள் கிடையாது, நம்மால் முடியாத விஷயமும் கிடையாது, சாதரணமாக விஷயம் தான், இது போன்ற சாதாரணமான அமலை தான் அல்லாஹ் விரும்புகிறான்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" صَلاَةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ، وَصَلاَتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ، لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ، لَمْ يَخْطُ خُطْوَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ خَطِيئَةً، حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ، وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ، وَتُصَلِّي ـ يَعْنِي عَلَيْهِ ـ الْمَلاَئِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ ""
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத்தெருவில் தொழுவதை விடவும் 'ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளி வாசலுக்கு வந்தால் அவர் பள்ளி வாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான். (கூட்டுத்) தொழுகையை எதிர்ப்பார்த்து அவர் பள்üவாசலில் இருக்கும்போது அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் (வெüயேறிவிடாமல்) எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால், (அங்கசுத்தியை அகற்றிவிடக் கூடிய) சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல் மூலம்) அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்.. அப்போது வானவர்கள், ''இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்றுபிரார்த்திக்கின்றார்கள். [புகாரி 477]
【நல்ல வார்த்தை தர்மம்மாகும் 】
நாம் அழகிய வார்த்தையை பேசினால் அவ்வார்த்தை தர்மமாக அமையும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாட்களும் தருமம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தருமமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும். புகாரி 2989
【நரகத்திருந்து தப்பித்துக்கொள்ளலாம்】
✍🏻 அன்புள்ளவர்களே! நாம் நல்ல வார்த்தை பேசுவதின் மூலமாக நரகம் தடுக்கப்படுகிறது.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.
பிறகும் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போதும் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.
பிறகு, ''பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக்கொள்ளுங்கள்)'' என்றார்கள் புகாரி 6023
【நல்ல வார்த்தையின் மூலமாக சொர்க்கம் செல்வான்】
✍🏻 அன்புள்ளவர்களே! சில நேரங்களில் நாம் நம்மையும் அறியாமலேயே நல்ல அல்லது கெட்ட பேச்சுகளை பேசிவிடுகிறோம். அதன் விளைவு மிகவும் பெரியதாக அமைந்து விடுகிறது என்பதை நாம் யோசிப்பதில்லை. பாதிக்கப்பட்ட ஒர் இறைநம்பிக்கையாளருக்காக வாதாடி அவருக்கேற்பட்ட பாதிப்பை அகற்ற வழி காண்பது, சிரமத்திலுள்ள ஒருவரின் சிரமத்தை அகற்ற பரிந்துரைப்பது, சண்டையிட்டுக்கொள்ளும் இருவரிடையே சமாதானம் ஏற்படுவதற்காகப் பேசுவது, ஆகிய நமக்கு பெரிய சாதனைகளாத் தெரிவதில்லை. ஆனால் இறை திருப்தியை நாடி இவற்றைப் பேசும்போது இறைவன் உயர் அந்தஸ்தை வழங்குகிறான். இதைப் போன்றே ஆட்சியாளரைத் திருப்திபடுத்துவதற்காக அவர் செய்யும் தவறையும் சரி என்று சொல்வது, பிறர் மனம் நோகும் வகையில் பேசுவது, பங்காளிகள் அல்லது நண்பர்களிடையே பகை மூட்டும் வகையில் பேசுவது ஆகிய நமது பார்வைக்கு ஒரு குற்றமாக தெரியவில்லை. ஆனால் இந்த பேச்சுகளின் பின் விளைவு கடுமையானது என்பதால் இவை நரகத்தின் அதலபாதாளத்தில் தள்ளிவிடும். ஆகவே எதைப் பேசினாலும், பேசுவதற்கு முன் அதன் பின் விளைவுகள் குறித்து யோசித்த பிறகே பேச வேண்டும். இதுவே இறைநம்பிக்கையாளரின் பண்பாகும்.
ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக் குரிய ஓரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ் வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். புகாரி 6478
【தர்மம் செய்தால் நன்மை மலைபோல் உயரும்】
✍🏻 அன்புள்ளவர்களே! யார் முறையான சம்பாத்திருந்து ஒரு ரூபாய் தர்மம் செய்தாலும் ஒரு தாய் தன் குழந்தையை எவ்வளவு பாதுகாப்பாக வளர்ப்பாளோ அதே போன்று அல்லாஹ் நம்முடைய தர்மத்தின் மூலமாக வரக் கூடிய நன்மைகளை பாதுகாத்து வைத்துயிருக்கிறான்.
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்துவிடுவான். புகாரி 1410
【தர்மம் செய்தால் வானவர்கள் பிராத்திப்பார்கள்】
தினமும் தர்மம் செய்தால் ஒவ்வொரு நாளையிலும் உலகத்திற்கு வரக்கூடிய இரு மலக்குமார்கள் நமக்காக வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வார்கள்.
'ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ''அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!'' என்று கூறுவார். மற்றொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக்கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுவார்கள். புகாரி 1442
【அல்லாஹ்வின் பெயரை மனனம் செய்தால் சுவனம்】
✍🏻 அன்புள்ளவர்களே! அல்லாஹ்வுக்கு (99) பல பெயர்கள் உள்ளன. அந்த பெயர்களை யார் மனனம் செய்கிறார்களோ அந்த மனிதனுக்கு சொர்க்கம் நிச்சயம் என்று அல்லாஹ் கூறுகிறான். பெயரை மனப்பாடம் செய்வதற்கு கஷ்டம் கிடையாது. மனப்பாடம் பன்னுவதற்கு சில முறைகள் உள்ளன. நாம் தினமும் பஸ்ஸில் பயணம் செய்பவராக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு பெயர் என்ற அடிப்படையில் 99 நாளைக்கு 99 பெயர்களை மனனம் செய்யலாம். அப்படியில்லையென்றால் நாம் வேளை செய்யும் போது ஒரு நாளைக்கு ஒரு பெயரை மனனம் செய்யலாம். அல்லாஹ்வின் பெயர்களை மனனம் செய்வதற்கு கஷ்டம் என்று நினைத்தால் நம்முடைய குழந்தைகள் எப்படி பள்ளி பாடத்தை படிப்பார்கள். இன்னும் சில குழந்தைகள் கீழ்தரமான அறுவருப்பான கூத்தாடிகளின் பாடல்களை மனனம் செய்கிறார்கள். இப்படி இருக்கும் போது இலகுவான அல்லாஹ்வின் பெயரை மனனம் செய்வதற்கு கஷ்டப்படுகிறார்கள். இது போன்ற ஈன செயல்களை செய்யாமல் நல்ல அமல்களை செய்ய வேண்டும்.
அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார். புகாரி 2736
【மலக்குமார்களின் துஆ】
✍🏻 அன்புள்ளவர்களே! நாம் கடமையான தொழுகை முடிந்த பின் அந்த இடத்திருந்து உடனே எழுந்திரிக்காமல் அதே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துயிருந்தால் நம்முடைய பாவங்களை மன்னிக்கும் படி அல்லாஹ்விடம் மலக்குமார்கள் பிராத்தனை செய்வார்கள்.
ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய)சிறு துடக்கு ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் ''இறைவா! இவருக்கு மன்னிப்பüப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக!'' என்று பிரார்த்திக்கிறார்கள். புகாரி 445
【இஸ்லாத்தில் உறுதியாக இருந்து மரணித்தால் சொர்க்கம் செல்வார்】
✍🏻 அன்புள்ளவர்களே! நாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்ட பிறகு எவருக்காக வேண்டியும் நம்முடைய மார்க்கத்தை விட்டு கொடுக்காமல் உறுதியாக இருந்து மரணித்து விட்டால் அந்த மனிதனை அல்லாஹ் செர்க்கத்தில் சேர்த்து விடுகிறான். அவர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு தவறு செய்துயிருந்தாலும் அல்லாஹ் அவரை செர்க்கத்தில் சேர்த்து விடுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக்கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, ''லா இலாஹ இல்லல்லாஹ்'' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்று சொன்னார்கள். நான் (மூன்றாவது முறையாக) ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)'' என்று கூறினார்கள். புகாரி 5827
ஏக இறைவனாம் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல் ஏகத்துவ கொள்கையில் இறக்கும் ஒருவர் செர்க்கம் புகுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் விபச்சாரம், திருடு போன்ற பாவங்களை அவர் செய்திருந்தால் அவற்றுக்கான தண்டனையை நரகத்தில் அனுபவித்து விட்டு இறுதியாக சொர்க்கம் புகுவார். விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே என்பதற்கு இதுவே கருத்தாகும். அவர் நரகம் புகமாட்டார் என்பதற்கு இத்தகையை குற்றவாளி முஸ்ம் நிரந்தரமாக நரகத்தில் இருக்க மாட்டார் என்று பொருளாகும். அல்லது அந்த பாவங்களுக்காக அவர் பாவ மன்னிப்புக் கோரி அதனை அல்லாஹ் ஏற்றுக் கொண்டால் நரகத்தில் நுழையாமலேயே சொர்க்கம் செல்லலாம்
【தொழுகையில் ஆமீன் கூறினால் பாவம் மன்னிக்கப்படும்】
✍🏻 அன்புள்ளவர்களே! கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக நாம் பள்ளிவாசலுக்கு வருகிறோம். ஜமாஅத்தாக தொழும் போது இமாம் ஃபாத்திஹா சூராவில் கடைசி வசனத்தை (கைரில் மக்லூபி அலைஹிம் வளல்லல்லாழ்ழீன்) ஒதி முடிக்கும் போது பின்னால் இருப்பவர்கள் ஆமீன் என்று கூற வேண்டும். அப்படி அவர் கூறும் போது அவர்களுடைய ஆமினும் மலக்குமார்களுடைய ஆமினும் ஒத்துப்போனால் அல்லாஹ் நம்முடைய முன் செய்த பாவங்களை மன்னிக்கிறான். ஆமீன் என்ற வார்த்தை கடுமையான, பாரதூரமான வாசகம் கிடையாது. நம்முடைய நாவுக்கு ஈசியாக வரக்கூடிய வார்த்தையாகும். இந்த சாதாரமான வாசகத்திற்கு நம்முடைய நல்ல அமல்களை விரும்புகிறான்.
தொழுவிப்பவர் (இமாம்), ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள். ஏனெனில், எவர் ஆமீன் கூறு(ம் நேரமா) வது வாவனவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)து டன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். புகாரி 780
[தொழுகையில் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று கூறினால் பாவம் மன்னிக்கப்படும்]
✍🏻 அன்புள்ளவர்களே! கடமையான தொழுகையை நிறைவேற்றும் போது இமாம் ஸமிஅல்லாஹீ மன் ஹமிதஹீ என்று கூறும் போது நாம் அதற்கு பகரமாக அல்லாஹீம்ம ரப்பனா லக்கல் ஹம்து கூறும் போது நம்முடைய வார்த்தையும் மலக்குமார்களுடைய வாசகமும் ஒத்துப்போனால் அல்லாஹ் நம்முடைய பாவத்தை மன்னிக்கிறான். இந்த வாசகம் நம்முடைய நாவுக்கு நுழையாத வார்த்தையா என்று பார்த்தால்? கிடையாது. சுலபமான வார்த்தையாக தான் இருக்கிறது. இந்த வார்த்தை கூறுவதின் மூலம் அல்லாஹ் நம்முடைய பாவத்தை மன்னிக்க விரும்புகிறான்.
இமாம் (தொழுகையில்), ''சமிஅல் லாஹு லிமன் ஹமிதஹு லி தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவிமடுத்தான்'' என்று கூறும் போது நீங்கள் ''அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்துலி இறைவா, எங்கள் இரட்சகனே! உனக்கே புகழ் அனைத்தும் உரியது'' என்று கூறுங்கள். ஏனெனில், (இறைவனைத் துதிக்கும்) வானவர்கüன் (துதிச்) சொல்லுடன் எவரது சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகின்றதோ அவர், அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். புகாரி 3228
【சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கபட கடமையான தொழுகை:】
✍🏻 அன்புள்ளவர்களே! கடமையான தொழுகைக்கான நேரம் வந்ததும் யார் முறையாக உழு செய்து உள்ளச்சத்துடன் ஒழுங்காகத் தொழுகின்றாரோ அவருடைய அத்தொழுகை – அவர் பெரும்பாவங்கள் செய்யாதவரை – அவருடைய சிறிய பாவங்கள் அனைத்திற்கும் பரிகாரமாகிவிடும். அந்நிலை அவருடைய ஆயுள் முழுவதும் உண்டு. (முஸ்லிம்)
【அதிக நன்மைகளையும் பாவங்களையும் போக்கும் ஜுமுஆத் தொழுகை!】
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ ثُمَّ رَاحَ فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً فَإِذَا خَرَجَ الْإِمَامُ حَضَرَتْ الْمَلَائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பெருந்துடக்கிற்காகக் குளிப்பது போன்று ஜுமுஆவுடைய நாளில் குளித்துவிட்டுப் பள்ளிக்குச் செல்பவர் ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து உபதேசத்தைச் செவியேற்கிறார்கள். புகாரி 881
【பாவம் போக்கும் ஐவேளைத் தொழுகை: 】
✍🏻 அன்புள்ளவர்களே! “உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி)
【ஈடு இணை ஏதுமில்லை】
✍🏻 அன்புள்ளவர்களே! நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட(செல்வர்)ர்களையும் நீங்கள் பிடித்து விடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர. (அந்தக் காரியமாவது:)
நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்’’ என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர் ‘‘சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும்’’ என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி(ச் சென்று இதுபற்றி வினவி)னேன்.
நபியவர்கள், “சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹு மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவை கூறியதாக அமையும்’’ என்று பதிலளித்தார்கள். புகாரி 843, முஸ்லிம் 5222
மேற்கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் கூறித் துதிப்பதன் மூலம் நாம் ஏகப்பட்ட நன்மைகளைக் கொள்ளையடித்துவிட முடியும். நாமோ இதை உணராமல் தஸ்பீஹ் செய்வது எல்லாம் முதியவர்களுக்கு மட்டுமே உரிய அமலைப் போன்று ஓரம் கட்டி வைத்து விட்டோம்.
உண்மையில் நன்மை செய்வதாயினும், தீமை செய்வதாயினும் அதற்கு ஏற்ற பருவம் இளமைப் பருவமே! கிடைக்கின்ற நேரங்களை எல்லாம் வீண் பேச்சிலும் வெட்டி அரட்டையிலும் ஈடுபட்டுக் கழிக்கின்ற நாம் நன்மை செய்யும் வாய்ப்பை இழந்து விடுகின்றோம். தீமைகளை அதிகமாகச் சேமிக்கின்றோம்.
இறைவனின் நினைவு நமது உள்ளத்தில் குடி கொண்டு விட்டால் தீமைகள் கட்டுக்குள் வந்துவிடும். நாம் அற்பமாகக் கருதும் திக்ர் என்ற இந்த அமல் அதற்குச் சிறந்த வழியாகும்.நன்மைகளின் மூலம் தீமைகளை அழிக்க முடியும் என்றே திருக்குர்ஆனும் கூறுகின்றது.
நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம். (அல்குர்ஆன்:23:96)
இது போன்ற சின்னச் சின்னச் செயல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து, இறைவனிடத்தில் அதிக நன்மைகளை பெறும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!
【நற்செயல்களை விரைந்து செய்ய வேண்டும்】
✍🏻 அன்புள்ளவர்களே! நற்செயல் புரிய வேண்டுமென்ற சிந்தனை மனதில் தோன்றியதுமே தாமதிக்காமல் செய்து முடித்திட முனைந்திட வேண்டும் தாமதித்தால் அதைத் தடுத்து நிறுத்தி விடுவதற்காக ஷைத்தான் மனதில் பல விதமான ஊசலாட்டத்தை விதைத்திடுவான் காரணம் நற்செயல் புரிவதால் நன்மை எழுதப்பட்டு பாவம் குறைக்கப்பட்டு அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வார்கள் அதனால் நரகம் வெறிச்சோடிக் கிடக்கும் என்பதால் பாவம் குறைக்கப் படாமல் இருப்பதற்காக நற்செயலின் வாசலை ஷைத்தான் பூட்டி விடுவான். ஒருவர் தொழாதவராக இருப்பார் தொழாமல் இருப்பது சரியல்ல தொழ வேண்டும் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அதற்கடுத்த நேரத் தொழுகைக்கான அழைப்பொலியை எதிர்பார்த்து பள்ளிக்கு விரைந்திட வேண்டும். தொழக் கூடியவராக இருப்பார் ஆனால் வைகறைத் (ஃபஜ்ரு) தொழுகையை தொழாதவராக இருப்பார் மற்ற நேரத் தொழுகைகளை தொழுது கொண்டு ஃபஜ்ரை தொழாமல் இருப்பது சரியல்ல நாளை முதல் அதையும் தொழுவதற்கு தொடங்கிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே அலாரத்தை வைத்துக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்து தொழுதிட வேண்டும். இன்னாருக்கு இன்னத் தேவைக்காக இவ்வளவு கொடுத்து உதவிடுவோம் என்ற சிந்தனை மனதில் எழுந்ததுமே தாமதிக்காமல் கொடுத்து உதவிட வேண்டும்.
✍🏻✍🏻நன்றியுரை:- تقبل الله منا ومنكم صالح الأعمال نسأل الله أن ييسر لنا أمورنا ويشرح صدورنا
“ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461.
எல்லா வல்லமைகளும் நிறைந்த அல்லாஹ் இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயனடைய நல்லருள் புரிவானாக!!! ஆமீன்.. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இக்குறிப்புரை வெளி வர உதவி செய்த அனைவருக்கும், நம் இணையத்தில் வந்து பயனும், பலனும் அடைந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹு கைரா.
✍" ஆக சிறுக நேரத்தில் பெரு நன்மைகளைச் சம்பாதிக்கும் பாக்கியத்தை பெற்று வாழ வல்ல நாயகன் அருள்புரிவானாக! ஆமீன்.… "
✍ இன்னும் சொல்ல வேண்டியது அதிகமாக உள்ளது நேரத்தின் நலனை கருதி முடித்துக் கொள்கிறேன் வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்……
வஸ்ஸலாம்
இக்குறிப்புரையின் தலைமையாசிரியர் & இக்குழு கண்காணிப்பாளர்:-
உங்களின் துஆக்களை பெற பேராசைப்படும்:-
உஸ்தாதுனா எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா. வாசுதேவநல்லூரி. செல் 7402127136 & ٩٩٤٢٤٠٧٣٥٨ நான் விவசாயி..
உதவியாசிரியர்:-
உஸ்தாதுனா மெளலானா ஹாபிழ் களந்தை B. அபு அஜ்மல் புகாரி யூசுபி. செல் 8754089943.
ஜுமுஆ பேருரையின் பயன்பாற்றிற்காக மட்டுமே இக்குறிப்புரை தரப்படுகின்றன, இவற்றை அனுமதி இல்லாமல் மறு பிரசுரம் செய்யலாகாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானது.
உங்களுக்கு பிடித்த தலைப்பில் PDF வடிவில் பயான் குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய..
https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4
********** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين ************
